For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மயான பூமி ஆக்கிரமிப்பு.. கோவை கலெக்டரிடம் டான்ஸ் ஆடியபடியே மனு அளித்த பழங்குடியினர்!

ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி கோவை ஆட்சியரிடம் பழங்குடி மக்கள் மனு அளித்தனர்.

By T Nandhakumar
Google Oneindia Tamil News

Recommended Video

    கோவை கலெக்டரிடம் டான்ஸ் ஆடியபடியே மனு அளித்த பழங்குடியினர்!-வீடியோ

    கோவை: பொள்ளாச்சி பகுதியில் மலைவாழ் மக்களின் மயானத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும் எனவே உடனடியாக அதனை அகற்ற வலியுறுத்தியும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இசை வாத்தியங்களுடன் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனமாடி நூதன முறையில் மனு அளித்தனர்.

    கோவையை அடுத்த பொள்ளாச்சி பகுதியில் உள்ள மணக்கடவு என்னும் இடத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த இடத்தில் இவர்களுக்காக மயான பூமியும் உள்ளது.

    adivasi tribal petition to the kovai collector office

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அந்த மயான இடத்தை சிலர் ஆக்கிரமித்ததாகவும் இதனால் தங்களால் இறந்தவர்களின் உடல்களை புதைக்க முடியவில்லை எனவும் அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்து உள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    இதனால் கோரிக்கையை வலியுறுத்தி, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இசை கருவிகள் வாசித்து , பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்தை ஆடிய படி நூதனமுறையில் மனு அளித்தனர். தற்போது மயான இடத்தை ஆக்கிரமித்து, தொடர்ந்து மலைவாழ் மக்கள் வாழும் இடத்தையும் ஆக்கிரமித்து வருவதாகவும் எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

    English summary
    The tribes demanded the removal of the graveyard and petitioned to the District Collector. Then they gave their pet to sing and dance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X