For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜஸ்ட் 1.5% ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை தக்க வைக்கிறது அதிமுக!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ள போதிலும் கூட, திமுக அணியை விட அதன் வாக்கு வித்தியாசம் வெறும் 1.5 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது தேமுதிக திமுக பக்கம் வந்திருந்தால் நிச்சயம் திமுக அணிதான் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் அது நடைபெறாமல் வைகோ தடுத்து விட்டதால் அதிமுக அணி வெற்றி பெற்று விட்டது.

ADMK assures its govt by a meager vote difference

பிற்பகல் 1.30 நிலவரப்படி அதிமுகவுக்கு கிடைத்துள்ள வாக்குகள் 41.4 சதவீதமாகும். திமுக அணிக்கு கிடைத்துள்ள வாக்குகள் 39.9 சதவீதம்:

திமுக- 31.6%
காங்கிரஸ்- 6.4%
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- 0.9%
மனிதநேய மக்கள் கட்சிக- 0.5%
புதிய தமிழகம்- 0.5%

அதிமுக, திமுக கூட்டணி வாக்கு வித்தியாசம்- 1.5 சதவீதமாகவே உள்ளது. அதேசமயம் 2.3 சதவீத வாக்குகளை தேமுதிக பெற்றுள்ளது. இது திமுக கூட்டணிக்குப் போனால், அதிமுகவை விட அதிக வாக்குகள் கிடைத்திருக்கும், திமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கும்.

எனவே கூட்டணி வலுவானதாக அமையாமல் போனதால்தான் திமுக ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம் மயிரிழையில்தான் அதிமுக தப்பிப் பிழைத்து ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.

English summary
ADMK has secured its govt by a meager vote difference than DMK front.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X