For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோமாதா பூஜை.. சிறப்பு துவா... ருத்ரமகா யாகம்... ஜெ.வுக்காக சுறுசுறு அதிமுக பூஜைகள்!

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என கோமாதா பூஜை, ருத்ரமகா யாகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளை அதிமுகவினர் செய்து வருகின்றனர்.

கடந்த மாதம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அமைச்சர், முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் அப்பல்லோ சென்று முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

சிறப்பு வழிபாடுகள்...

இது ஒருபுறம் இருக்க, முதல்வர் பூரண குணமடைய வேண்டி அதிமுகவினர் அப்பல்லோ மருத்துவமனை வாசலிலும், கோயில்கள், தேவாலங்கள் மற்றும் மசூதிக்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

கோமாதா பூஜை...

அதன்படி, முதல்வர் பூரண குணமடைய வேண்டி மது சூதனன் தலைமையில் கோ மாதா பூஜை நடைபெற்றது.

சிறப்பு தூவா...

சிறப்பு தூவா...

இதேபோல், திண்டுக்கல் பெரிய பள்ளிவாசலில் உள்ள அமீரு நிஷா பேகம் பள்ளி வாசலிலும் சிறப்பு தூவா நடைபெற்றது. இதில், வனத்துறை அமைச்சர் சீனிவாசன், தமிழ் மகன் உஷான், நத்தம் விஸ்வநாதன், மேயர் மருதராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ருத்ரமகா வேள்வி...

ருத்ரமகா வேள்வி...

ஜெயலலிதா சிகிச்சைப் பெற்று வருவதால், அவரை இலாகா இல்லாத முதல்வராக அறிவித்து, அவரது துறைகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் வழங்கியுள்ளனர். இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோவிலில் இன்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் மகன்கள் ரவீர்ந்திரநாத், பிரதீப் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடையை வேண்டி ருத்ரமகா வேள்வி நடத்தினர்.

இதில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர்கள் தங்கதமிழ்செல்வன் உள்ளிட்ட அதிமுகவினர் உடனிந்தனர்.

இந்தக் கோவிலின் அறங்காவலர்கள் குழு பொறுப்பில் இருப்பது ஓபிஎஸ் குடும்பத்தினர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The ADMK cadres have performed a special poojas for chief minister Jayalalithaa's recovery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X