• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

M for Maran, S for Saroja வேண்டாம்... 'அ' ஃபார் அதிமுக ஓ.கே..!

Google Oneindia Tamil News
ADMK candidate's name comes first in candidate list
சேலம்: ஏற்காடு இடைத் தேர்தலில் வழங்கமாக ஆங்கில அகரவரிசையில் வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெறுவதற்குப் பதில், தமிழ் அகரவரிசைக்கு மாறி விட்டனர். இதனால் அதிமுக வேட்பாளரின் பெயர் முதல் பெயராக இடம் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

வழக்கமாக வேட்பாளர்கள் பட்டியலைப் பார்த்தால் ஆங்கில அகர வரிசைப்படிதான் பெயர்களை இடம் பெற வைப்பார்கள். இதனால் சில நேரங்களில் முக்கிய வேட்பாளர்களின் பெயர்கள் கடைசியிலும், அவரைத் தவிர வேறு யாருக்குமே அதிகம் தெரிந்திராத சுயேச்சை வேட்பாளர்களின் பெயர் முதல் இடத்திலும் வந்து விடும்.

இந்த நிலையில் ஏற்காடு இடைத் தேர்தலில் வித்தியாசமான பார்முலாவைக் கையில் எடுத்துள்ளனர். அதாவது தமிழ் அகரவரிசைப்படி பெயர்களை இடம் பெற வைத்துள்ளனர்.

ஆங்கில அகரவரிசைப்படி வைத்தால் திமுக வேட்பாளர் மாறனின் பெயர் முதலில் வரும். அதிமுக வேட்பாளர் சரோஜாவின் பெயர் மாறனுக்குப் பின்னால்தான் வர முடியும்.

ஆனால் தமிழ் அகரவரிசைக்கு மாறியுள்ளதால் சரோஜாவின் பெயர் முதலிடத்திற்கு வந்துள்ளது. அவருக்குப் பின்னால் போய் விட்டது திமுக வேட்பாளர் மாறனின் பெயர்.

ஏன் இந்த திடீர் தமிழ்ப் பற்று என்று தெரியவில்லை!

English summary
ADMK candidate Saroja's name has been placed first in candidate list in Yercaud by poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X