• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆயிரம்விளக்கில் ஜெ... "நகை" புகழ் கற்பகம் விருப்பம்.. 10 வயதில் "இரட்டை இலை" பச்சை குத்தியவர்!

|

சென்னை: முதல்வர் ஜெயலலிதா கைதாக சிறையில் போய் உட்கார்ந்திருந்தபோது தமிழகத்தை உலுக்கி எடுத்த அதிமுகவினரை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. அவர்களி்ல ஆண்களில் ஒருவரும், பெண்களில் ஒருவரையும் மறக்கவே முடியாது. அந்தப் பெண்தான் கற்பகம்.

ஜெயலலிதா சிறைக்குப் போனபோதும் சரி, அதன் பின்னர் அவர் ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் பிரசாரத்தின்போதும் சரி கற்பகம்தான் ஹாட் டாப்பிக்காக வலம் வந்தார்.

அவரது இந்த பிரபலத்துக்குக் காரணம் அவர் போட்டிருந்த நகை நட்டுகள்தான் காரணம். அம்புட்டு நகைகளுடன் அவர் வளைய வந்த கோலம்தான் மக்கள் மனதில் இன்னும் நிழலாடுகிறது. அத்தனை நகையிலும் ஜெயலலிதா ஜொலித்தார் என்பதுதான் இதில் மெயின் விஷயமே.

ஜெ.வுக்கு 110.. கற்பகத்துக்கு 111

ஜெ.வுக்கு 110.. கற்பகத்துக்கு 111

எப்படி ஜெயலலிதா என்றால் விதி எண் 110 ஞாபகத்திற்கு வருமோ அதே போல கற்பகம் என்றதும் 111 என்ற எண் நினைவில் வர வேண்டும். ஆமாங்க, சென்னை மாநகராட்சியின் 111வது வார்டு கவுன்சிலர்தான் கற்பகம்.

ஆத்தாடி... எத்தாத்தண்டி!

ஆத்தாடி... எத்தாத்தண்டி!

ஆள் மட்டும் பார்க்க உருவத்தில் பெரிதாக இல்லை. அவர் போட்டிருக்கும் நகைகளும் கூட பிரமாண்டம்தான். எல்லாவற்றிலும் ஜெயலலிதா நீக்கமற நிறைந்திருக்கிறார்.

காதில் தொங்கும் தோடு

காதில் தொங்கும் தோடு

அவரது இரு காதுகளிலும் பெரிய சைஸ் தோடு தொங்குகிறது. அதில் ஜெயலலிதா மற்றும் இரட்டை இலையை கற்களால் பொறித்துள்ளார் கற்பகம்.

மூக்கை விட பெரிய மூக்குத்தி

மூக்கை விட பெரிய மூக்குத்தி

அவரது மூக்கை விட பெரிதாக இருக்கிறது மூக்குத்தி. அதில் மட்டும்தான் ஜெயலலிதா படம் இல்லை.

தாமரைக்கனி சைஸ் மோதிரம்

தாமரைக்கனி சைஸ் மோதிரம்

முன்பு தாமரைக்கனிதான் பெரிய சைஸ் மோதிரம் போட்டிருப்பார். இப்போது கற்பகம் அதை பீட் செய்து விட்டர். இவர் போட்டுள்ள பெரிய சைஸ் மோதிரத்திலும் ஜெயலலிதா இருக்கிறார்.

பிறவி அதிமுக

பிறவி அதிமுக

இவர் ஒரு பிறவி அதிமுககாரர். இவரது குடும்பமே எம்.ஜி.ஆர். பக்தர்களாம். அதிமுக ஆரம்பித்தது முதலே இவரது குடும்பத்தினர் அக்கட்சியில் உள்ளனராம்.

எல்லாமே அம்மாதான்

எல்லாமே அம்மாதான்

கற்பகத்திடம் ஜெயலலிதா குறித்துக் கேட்டால், எனக்கு எல்லாமே அம்மாதாங்க. என் உடம்புல ஓடுற ரத்தம், என் உசுரு எல்லாமே அம்மாவுக்குத்தான்..!

தம்பிதான் ஐடியா கொடுத்தான்

தம்பிதான் ஐடியா கொடுத்தான்

என் தம்பி கொடுத்த ஐடியாப்படிதான் இப்படி தோடு, மோதிரம் என எல்லாவற்றிலும் அம்மா படத்தைப் போட்டுள்ளேன். அம்மாவே இதைப் பார்த்து சிரிச்சிருக்காங்க. அது போதுங்க எனக்கு. உலகமே என்னைப் பார்த்தது போல ஒரு சந்தோஷம்.

விரல்களை மடக்கினா.. இரட்டை இலை

விரல்களை மடக்கினா.. இரட்டை இலை

இரு கைகளிலும் இரட்டை இலையைப் பச்சை குத்தியுள்ளார். இரு கை விரல்களையும் மடக்கி குத்துவது போல காட்டினார் என்றால் இரட்டை இலைதான் நம்மை குத்த வருவது போல தோன்றும்.

10 வயசுல பச்சை குத்தியதாம்

10 வயசுல பச்சை குத்தியதாம்

இது அவரது பத்து வயதில் குத்திய பச்சையாம். அப்போது எனக்கு விவரம் தெரியாது. ஆனால் அம்மாவை நன்றாக் தெரியும். அம்மா பெயரைச் சொல்லிக் கொண்டே பச்சை குத்திக் கொண்டேன். வலிக்கவே இல்லை என்று கூறி பகபகவென சிரிக்கிறார் கற்பகம்.

ஆயிரம் விளக்கி்ல் சீட் கிடைக்குமா

ஆயிரம் விளக்கி்ல் சீட் கிடைக்குமா

இப்படியாக அனைவரின் கவனத்திலும் பட்டுத் தெறித்த கற்பகம் தற்போது ஆயிரம் விளக்கு தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட விரும்பி விருப்ப மனு கொடுத்துள்ளார். அம்மா மட்டும் இங்கே போட்டியிடுவதாக அறிவி்க்கட்டும். பிறகு பாருங்கள் வேடிக்கையை. எதிர்த்து நிற்கும் யாருக்கும் டெபாசிட் கூட கிடைக்க விடாமல் செய்து விடுவோம் என்று கூறி சிரிக்கிறார் கற்பகம்.

ஆனாலும் தமிழக சட்டசபைக்கு கற்பகம் மாதிரியும் நாலு பேர் தேவைதான்... விட்டால் வளர்மதிக்கு சரியான போட்டியாக இவர் வருவார்!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
The famousADMK councilor Karpagam wants CM Jayalalitha to contest in Aayiram Vilakku in the coming assembly elections.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more