For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவின் ஆட்சிக் கனவை தடுத்து நிறுத்திய கொங்கு மண்டலம்.. தொடர்ந்து அதிமுகவின் கோட்டை!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுகவின் அபார வெற்றிக்கு பெரிதும் கை கொடுத்திருப்பது கொங்கு மண்டலம் தான். இந்த மண்டலத்தில் மொத்தம் உள்ள 61 தொகுதிகளில் 47 இடங்களை கைப்பற்றி கொங்கு மண்டலம் எப்போதும் தம்முடைய கோட்டை என நிரூபித்திருக்கிறது அதிமுக. இந்த மண்டலத்தில் திமுக கூட்டணிக்கு கிடைத்த பெரும் தோல்வி தான் அதை ஆட்சியைப் பிடிக்க முடியாமல் தடுத்துள்ளது.

அதேபோல் மதுரை மண்டல மாவட்டங்களிலும் அதிமுக கூடுதலான தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் ஆகியவற்றில் மொத்தம் 61 தொகுதிகள் உள்ளன. அதிமுக தொடங்கப்பட்டதில் இருந்து நடைபெற்ற தேர்தல்களில் அந்தக் கட்சிக்கு அதிக அளவிலான வெற்றியைக் கொடுப்பதிலும், தமிழக அரசியலின் பல்வேறு திருப்புமுனைகளை உருவாக்கிய நிகழ்வுகளுக்கு மையப் புள்ளியாகவும் இருப்பது இந்த மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலம்தான்.

2001 சட்டசபை தேர்தலில் 48 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி 38 தொகுதிகளைக் கைப்பற்றியது. அதேநேரம், 2006-இல் அதிமுக தோல்வி அடைந்த நிலையிலும் கொங்கு மண்டலத்தில் இருந்து 16 பேர் எம்.எல்.ஏ.க்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு கடந்த 2011 தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி இந்த மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளில் 55 தொகுதிகளைப் பிடித்து அதிமுகவின் நம்பிக்கைக்கு உரியதாக திகழ்ந்தது.

தற்போதைய தேர்தலில் மொத்தமுள்ள 61 தொகுதிகளில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைத் தவிர 60 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 47 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

அள்ளி தந்த ஈரோடு, கோவை

அள்ளி தந்த ஈரோடு, கோவை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளையும் அதிமுகவே கைப்பற்றியுள்ளது. சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளையும், கோவையில் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளையும் அதிமுக அள்ளியது.

இதர மாவட்டங்கள்...

இதர மாவட்டங்கள்...

திருப்பூரில் 8 தொகுதிகளில் 6 தொகுதிகளையும், நாமக்கல்லில் 6 தொகுதிகளில் 5 தொகுதிகளையும், கிருஷ்ணகிரியில் 6 தொகுதிகளில் 3, தருமபுரியில் 5 தொகுதிகளில் 3, கரூரில் தேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளில் 2, நீலகிரியின் 3 தொகுதிகளில் 1ஐ அதிமுகவே கைப்பற்றியுள்ளது.

திமுகவுக்கு 13

திமுகவுக்கு 13

திமுக, காங்கிரஸ் கூட்டணியானது இந்த 9 மாவட்டங்களில் உள்ள தாராபுரம் (தனி), மடத்துக்குளம், உதகை, கூடலூர், சிங்காநல்லூர், சேலம் வடக்கு, பரமத்தி வேலூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, தளி, பென்னாகரம், தருமபுரி, குளித்தலை ஆகிய 13 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

கை கொடுத்த மதுரை..

கை கொடுத்த மதுரை..

இதேபோல் மதுரை மண்டலத்துக்கு உள்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மதுரை மண்டலத்தில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளிலுமே அதிமுக களம் இறங்கியது. திருவாடானை தொகுதியில் அதிமுக சார்பில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் நடிகர் கருணாஸ் போட்டியிட்டார். இந்த மண்டலத்தின் 36 தொகுதிகளில் அதிமுக 23- ல் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த தேர்தலில் அதிமுக நேரடியாகப் போட்டியிட்டு வென்ற இடங்களைக் காட்டிலும், தற்போது 4 தொகுதிகள் கூடுதலாகப் பெற்றிருக்கிறது. அதேபோல், திமுகவும் 6-இல் இருந்து 11 தொகுதிகளை கைப்பற்றியிருக்கிறது. கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத காங்கிரஸ், இந்தத் தேர்தலில் 2 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது.

மதுரை மாவட்டம்...

மதுரை மாவட்டம்...

2011 தேர்தலில் மதுரை மாவட்டத்தில் 6-இல் அதிமுகவும், தேமுதிக 2, மார்க்சிஸ்ட் 1, பார்வர்டு பிளாக் 1 என 4 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றன. இந்த முறை 8 தொகுதிகளில் அதிமுக வென்றுள்ளது. 2 தொகுதிகளை திமுக பிடித்துள்ளது.

தேனி, திண்டுக்கல்...

தேனி, திண்டுக்கல்...

தேனி மாவட்டத்தில் கடந்த தேர்தலில் அதிமுக 2, மார்க்சிஸ்ட் 1, திமுக 1 என கைப்பற்றி இருந்தன. ஆனால், இப்போது 4 தொகுதிகளுமே அதிமுகவின் வசமாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் 7 தொகுதிகளில் அதிமுக 3, திமுக 2, மார்க்சிஸ்ட் மற்றும் புதிய தமிழகம் தலா 1 என்றிருந்தது. தற்போது, அதிமுக அதே நிலையில் 3 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. திமுக கூடுதலாக 2 இடங்களைப் பெற்று மொத்தம் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

விருதுநகர், சிவகங்கை

விருதுநகர், சிவகங்கை

விருதுநகர் மாவட்டத்தில் 2011-ல் 4 இடங்களில் நேரடியாக அதிமுக வெற்றி பெற்றிருந்தது. தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் தலா ஒரு இடங்களில் இருந்தன. இந்த முறை 3 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வென்றுள்ளது. திமுகவின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் அதிமுகவிடம் 2, திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் தலா ஒரு தொகுதிகள் இருந்தன. இந்த தேர்தலில் அதிமுக, திமுக தங்களுக்கான எண்ணிக்கையை அப்படியே தக்க வைத்துக்கொண்டன. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தைப் பிடித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த தேர்தலில் அதிமுக 2 தொகுதியிலும், கூட்டணிக் கட்சியான மனிதநேய மக்கள் கட்சி 1, திமுக 1 தொகுதியிலும் வென்றன. இம்முறை அதிமுக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 1 தொகுதியில் வென்றுள்ளது.

திமுக எண்ணிக்கையும் உயர்வு

திமுக எண்ணிக்கையும் உயர்வு

இந்த 6 மாவட்டங்களில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் திமுக வென்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது.

English summary
ADMK won a successive term in the assembly elections did well in regions like the Madurai and western Kongu belt of TN.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X