For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் தேர்வு மையங்கள் இருந்திருந்தால் கிருஷ்ணசாமியின் மரணம் ஏற்பட்டிருக்காது: விஜயகாந்த்

தமிழகத்தில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தால் கிருஷ்ணசாமியின் மரணம் ஏற்பட்டிருக்காது என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    நீட் தேர்வால் ஏற்பட்ட உடல்-மன உளைச்சலால் 3 பேர் பலி- வீடியோ

    சென்னை : தமிழக மாணவர்கள் அனைவருக்கும் தமிழகத்திலேயே நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தால் கிருஷ்ணசாமியின் மரணம் தடுக்கப்பட்டு இருக்கும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    திருத்துறைப்பூண்டியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவனின் தந்தை கிருஷ்ணசாமி என்பவர், திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழ்ந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ADMK Has no guts to Get TN Rights Says Vijayakanth

    இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி கேரளாவில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அதீத மன உளைச்சலுக்கும், அலைக்கழிப்புக்கும் அவர் ஆளானதே இந்த இறப்புக்குக் காரணம். இதற்கு மத்திய அரசு முழுப்பொறுப்பு ஏற்கவேண்டும். தமிழகத்திலேயே மாணவர்களை நீட் தேர்வு எழுத அனுமதித்து இருந்தால், இந்த மரணம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டு இருக்கும்.

    தமிழ்நாட்டின் உரிமையை கேட்டுப் பெறுகின்ற தைரியம் தற்போதைய ஆளும் அதிமுக அரசுக்கு எள்ளளவும் இல்லை என்றும் விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    ADMK Has no guts to Get TN Rights Says Vijayakanth. DMDK Leader Vijayakanth shared his regret on Krishnasamay' Death at Ernakulam .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X