For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தலோடு, தமிழக சட்டசபைக்கு தேர்தலா? அதிமுக கடும் எதிர்ப்பு

நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    எய்ம்ஸை யார் கொண்டு வந்தா என்ன.. ?-வீடியோ

    சென்னை: நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    நாடாளுமன்றம் மற்றம் சட்டசபைக்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் மோடி விரும்புகிறார். இதனால் நேரம் மற்றும் செலவு மிச்சமாகும் என கருதுகிறார் பிரதமர் மோடி.

    இதுதொடர்பாக மாநில அரசுகளிடமும் அவர் கருத்துக்களை கேட்டு வருகிறார். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்த சட்ட ஆணையம் முடிவு செய்துள்ளது.

    சட்ட ஆணையம் ஆலோசனை

    சட்ட ஆணையம் ஆலோசனை

    இதுதொடர்பாக நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. ஆனால் இதற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    அதிமுக எதிர்ப்பு

    அதிமுக எதிர்ப்பு

    இந்நிலையில் நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சட்ட ஆணையத்திற்கு அதிமுக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    ஜெ. எதிர்ப்பு தெரிவித்திருந்தார்

    ஜெ. எதிர்ப்பு தெரிவித்திருந்தார்

    தற்போதைய சட்டசபை ஆயுட்காலத்தை குறைக்க கூடாது என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறைக்கு ஜெயலலிதா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்றும் அதிமுக சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2021ல் ஆயுட்காலம் நிறைவு

    2021ல் ஆயுட்காலம் நிறைவு

    மேலும் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, நிலையான ஆட்சியை தரவேண்டும் என்பதற்காக 2016ல் மக்கள் அதிமுகவுக்கு வாய்ப்பளித்தனர். தமிழக சட்டசபைக்கு ஆயுட்காலம் 2021ல் நிறைவடைகிறது. மக்களுக்கு கொடுத்துள்ளோம்

    வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம்

    வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம்

    தேர்தல் சமையத்தில் நிறைவேற்றுவதாக பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்துள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றினாலும் இன்னும் பல நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது.

    குறைக்கப்படக்கூடாது

    குறைக்கப்படக்கூடாது

    சட்டமன்றத்தின் ஆயுட்காலத்தை குறைப்பதால் மக்கள் விரும்பிய நிலையான ஆட்சி பாதிக்கப்படும். ஒரே நேரத்தில் தேர்தல் என்ற திட்டத்தால் தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் குறைக்கப்படக்கூடாது.

    சிவி சண்முகம் பங்கேற்பு

    சிவி சண்முகம் பங்கேற்பு

    இதனிடையே டெல்லியில் சட்ட ஆணையம் நாளை நடத்தும் கருத்துக்கேட்பு ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

    English summary
    ADMK has opposed election for assembly and Parliament at same time. ADMK has written a letter to Law commission.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X