For Daily Alerts
Just In
சென்னையில் ஜெ. வெற்றியைக் கொண்டாடிய அதிமுக தொண்டர் மின்சாரம் தாக்கி பலி
சென்னை: சென்னை யானைக்கவுனியில் அதிமுக கொண்டாட்டத்தின் போது, இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடகா ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியை அதிமுகவினர் இனிப்புகள் கொடுத்தும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

அந்தவகையில், சென்னை யானைக்கவுனியில் ஜெயலலிதா விடுதலையை அதிமுகவினர் கொண்டாடினர். அப்போது, அதிமுக கொடியை கம்பத்தில் ஏறி கட்ட முற்பட்ட சக்தி என்ற இளைஞரை மின்சாரம் தாக்கியது. இதில் பரிதாபமாக அந்த இளைஞர் உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்ததால் அங்கு கொண்டாட்டம் மறைந்து சோகமான சூழ்நிலை உண்டானது.