For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு விழாவில் கிரண்பேடி-அதிமுக எம்எல்ஏ நேரில் வாக்குவாதம்.. 'யூ கோ' என பரஸ்பரம் கத்தியதால் பரபரப்பு

Google Oneindia Tamil News

புதுவை: அரசை குற்றம்சாட்டி அதிமுக எம்எல்ஏ அன்பழகன் பேசியபோது மைக்கை ஆஃப் செய்ததால் கோபமடைந்து ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுவையில் உள்ளாட்சித் துறை சார்பில் கம்பன் கலையரங்கில் விழா நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என கலந்து கொண்டனர்.

அப்போது விழாவில் அதிமுக எம்எல்ஏ அன்பழகன் பேசினார். அப்போது அரசின் திட்டங்கள் முறையாக நிறைவேற்றப்படவில்லை. திறந்தவெளி கழிவறை இல்லாத மாநிலமாக புதுச்சேரியை அறிவிக்க ஆளுநர் யார்.

பேச்சை நிறுத்த

பேச்சை நிறுத்த

எனது தொகுதியில் ஏராளமான வீடுகளில் கழிவறையே இல்லை என்று கூறினார். அப்போது ஆளுநர் கிரண்பேடி அன்பழகனின் பேச்சை நிறுத்துமாறு கூறினார்.

பொது மேடை

பொது மேடை

எனினும் அவர் தொடர்ந்து பேசி கொண்டே இருந்ததால் மைக்கை ஆப் செய்யுமாறு கிரண்பேடி உத்தரவிட்டதை தொடர்ந்து மைக் ஆப் செய்யப்பட்டது. இதனால் கோபமடைந்த அன்பழகன் பொது மேடையில் ஆளுநருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒருமையில் பேசிய அன்பழகன்

ஒருமையில் பேசிய அன்பழகன்

இதையடுத்து கிரண்பேடி கைகூப்பி யூ கோ என்று எம்எல்ஏவிடம் கூற அதற்கு அவரோ தனது கைகளை கூப்பி யூ கோ என்று கூறினால் நீங்கள் போய்விடுவீர்களா என கேட்டார். ஒரு கட்டத்தில் ஒருமையிலும் அவரை அன்பழகன் பேசினார்.

கால விரயம்

கால விரயம்

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கிரண்பேடி கூறுகையில் நேரத்தை விரயமாக்கும் விதமாக எம்எல்ஏ அன்பழகன் பேசிக் கொண்டிருந்ததால் மைக்கை ஆப் செய்ய கூறினேன். அதற்கு முன்பு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர் பேச்சை நிறுத்தவில்லை. அதனால் மைக்கை ஆப் செய்ய உத்தரவிட்டேன் என்றார்.

அநாகரிகம்

இதுகுறித்து எம்எல்ஏ அன்பழகன் பேசுகையில் மைக்கை ஆப் செய்ய சொல்ல ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரம் கொடுத்தது யார். ஒரு பொது மேடையில் அநாகரிகத்துடன் நடந்து கொள்ளலாமா என்று அன்பழகன் கேள்வி எழுப்பினார்.

English summary
A verbal spat between Governor Kiran Bedi and ADMK MLA Anbalagan in a public event. Here is the video which goes viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X