For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

43 வயதில் திருமணம்.. நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்.. பெரும் சோகத்தில் அதிமுக எம்எல்ஏ!

நிச்சயிக்கப்பட்ட பெண் திடீரென்று மாயமாகி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்- வீடியோ

    ஈரோடு: 43 வயதுக்கு பின்னர் எம்எல்ஏவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், மணப்பெண் மாயமாகிவிட்டது ஈரோடு மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியுடன் கூடிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஈஸ்வரன். வயது 43. இவரது சொந்த ஊர் உஜ்ஜங்கனூர். நீண்ட காலமாக திருமணத்தை பற்றி நினைக்காத ஈஸ்வரனுக்கு சமீபத்தில்தான் உக்கரத்தை சேர்ந்த சந்தியா என்ற 23 வயது பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சந்தியா எம்.சி.ஏ. வரை படித்துள்ளார்.

    பத்திரிகை தந்தனர்

    பத்திரிகை தந்தனர்

    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலிலேயே திருமணத்தை நடத்திடலாம் என முடிவு செய்யப்பட்டு, வருகிற 12-ந் தேதி திருமண நாளும் முடிவு செய்யப்பட்டது. அதற்காக பத்திரிகை அச்சடிக்கும் வேலை ஜரூராக தொடங்கியது. பின்னர் ஒருத்தர் விடாமல் அனைத்து உறவினர்கள், கட்சியினர்களுக்கும் பத்திரிகை தரப்பட்டது. இரண்டு வீட்டிலும், கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேல் இந்த பத்திரிகை தரும் வேலையை மட்டும் செய்தார்கள்.

    தடபுடல் ஏற்பாடு

    தடபுடல் ஏற்பாடு

    இரண்டு வீடுகளிலும் கல்யாண களை கட்டியது. ஏற்பாடுகளோ தடபுடல்தான்! இந்நிலையில் கடந்த 1-ந்தேதி காலை 11 மணியளவில் மணப்பெண் சந்தியா எங்கோ வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தார். அப்போது "எங்கம்மா கிளம்பற? என்று அவரது அம்மா தங்கமணி கேட்டார். அதற்கு சந்தியாவோ, நான் சத்தியமங்கலத்தில் உள்ள அக்கா வீட்டுக்கு போய்ட்டு உடனே வந்திடறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பினார். ஆனால் சந்தியா அக்கா வீட்டுக்கு போகவில்லை என்று வீட்டிற்கு மெதுவாகத்தான் தெரியவந்தது.

    சந்தியா எங்கே?

    சந்தியா எங்கே?

    சந்தியா எங்கே போனார் என்று தெரியவில்லை. எங்கெங்கோ தேடி பார்த்தனர். 2 நாள் ஆகியும் சந்தியா கிடைக்கவில்லை. இதனால் தங்கமணி, மகளை காணோம் என்று போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். அந்த புகாரில், "கொளத்துப்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரை என் மகள் காதலித்து வந்தாள், அதனால் அவருடன்தான் என் மகள் சென்றிருக்க வேண்டும்... என் மகளை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணையை கையிலெடுத்து, மாயமான சந்தியாவை தேடி வருகிறார்கள்.

    அதிர்ச்சியில் எம்எல்ஏ

    அதிர்ச்சியில் எம்எல்ஏ

    இதில் அதிகமாக அதிர்ச்சிக்கு உள்ளாகி இருப்பது எம்எல்ஏதான். 43 வருடங்கள் கழித்து திருமணம் செய்யலாம் என்று முடிவெடுத்த நிலையில், இப்போது தனக்காக நிச்சயிக்கப்பட்ட பெண் மாயமானதால் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் உள்ளார். எம்எல்ஏவின் அதிர்ச்சிக்கு இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. இந்த திருமணத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் என அனைவருமே கலந்து கொள்வதாக இருந்ததாம்!

    English summary
    ADMK-MLA-Eswaran-Marriage-stopped-after-Bride-missing
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X