For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவினரிடம் தாராளமாக புரளும் ரூ.50, ரூ.100.. அரசு நிறுவனங்களிடம் வாரி சுருட்டியதா?

சில்லறைத் தட்டுப்பாடால் நாடு முழுவதும் மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், மூன்று தொகுதி தேர்தல் பணப்பட்டு வாடாவுக்காக, அரசுத்துறை நிறுவனங்களில் வசூலான 50, 100 ரூபாய் நோட்டுக

Google Oneindia Tamil News

கரூர்: மூன்று தொகுதி தேர்தல் பணப்பட்டு வாடாவுக்காக, அரசுத்துறை நிறுவனங்களில், வசூலான, 50, 100 ரூபாய் நோட்டுகளை, அதிமுகவினர் வாங்கி பதுக்கியதாக புதிய புகார் எழுந்து உள்ளது.

திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் அதிரடி நடவடிக்கையால் பணப் பட்டுவாடா உள்ளிட்ட செலவுகளை சரிகட்ட கட்சியினர் திண்டாடி வருவதாகக் கூறப்படுகிறது.

ADMK money distribution in Aravakurichi

இதனால் கடந்த 8ம் தேதி இரவு முதல் தேர்தல் செலவுக்காக, 100, 50 ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல், அவர்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.

ஆனால், தற்போது இந்த நிலைமை மாறி அதிமுகவினர் தாராளமாக 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை வாக்காளர்களுக்கு அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.

திமுக உள்ளிட்ட மற்ற கட்சியினர் பழைய நோட்டுகள் இல்லாமல் தடுமாறி வரும் நிலையில், அதிமுகவினர் மட்டும் எப்படி கட்டுக்கட்டாக 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை விநியோகித்து வருகின்றனராம்.

இது எப்படி சாத்தியம் என எதிர்க்கட்சிகள் ஆராய்ந்ததில், மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடை, ரேஷன் கடை மற்றும் அரசு பஸ்களில் வசூலாகும் தொகையில், 100, 50 ரூபாய் நோட்டுகளை சேகரித்து ஆளும் கட்சி இப்படி விநியோகித்து வருவதாக கூறப்படுகிறது.

English summary
The reports have come out that the ADMK functionaries are giving money in this 3 constituency election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X