For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹஜ் மானியம் ரத்துக்கு திமுக, அதிமுக எதிர்ப்பு!

ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக, அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    இஸ்லாமியர்களுக்கான ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து

    சென்னை : ஹஜ் புனித பயணம் செல்வோருக்கான மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு அதிமுக எம்பி அன்வர் ராஜா மற்றும் திமுகவின் சல்மா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெண் குழந்தைகளின் கல்விக்காக நிதி செலவிடப்படுவது வரவேற்கத் தக்க விஷயம் என்றாலும், அதற்காக ஹஜ் மானியத்தை தான் ரத்து செய்ய வேண்டுமா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    ஹஜ் புனித யாத்திரை செல்வோருக்கான மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர்அப்பாஸ் நக்வி கூறியுள்ளார். ரத்து செய்யப்பட்ட மானியமானது பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்நிலையில் ஹஜ் மானியம் ரத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக எம்பி அன்வர் ராஜா, இந்த அறிவிப்பு ஏற்க முடியாததாக உள்ளது என்றார். இஸ்லாத்தில் உள்ள 5 கடமைகளில் முக்கியமானது ஹஜ் பயணம் செல்வது, இது ஏழைகளால் முடியாது என்பதாலேயே அரசு மானியம் கொடுத்து அவர்களை மெக்காவிற்கு அனுப்பி வருகிறது.

    பெண்கல்விக்கு நிதி தேவைதான்

    பெண்கல்விக்கு நிதி தேவைதான்

    பெண் குழந்தைகளின் கல்விக்காக நிதி ஒதுக்குவதை தவறு என்று சொல்லவில்லை, ஆனால் இந்த மானியத்தை ரத்து செய்து தான் அதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மத்திய அரசு நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

    முறையாக திட்டமிட வேண்டும்

    முறையாக திட்டமிட வேண்டும்

    வருவாயை வைத்து முறையாக திட்டமிட்டு பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கு செலவு செய்யலாம். ஹஜ் மானியத்தை ரத்து செய்து தான் பெண் குழந்தைகளின் கல்விக்கு நிதி என்ற சொல்வது ஏமாற்று வேலையாகத் தான் பார்க்க நேரிடுகிறது என்றும் உடனடியாக அரசு இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும் அன்வர் ராஜா கூறியுள்ளார்.

    ஹஜ் யாத்ரிகர்கள் குறைவார்கள்

    ஹஜ் யாத்ரிகர்கள் குறைவார்கள்

    மத்திய அரசின் இந்த அறிவிப்பால் ஏழைகள் ஹஜ் செல்ல முடியாத நிலை ஏற்படும். மானியத்தை ரத்து செய்யாமல் இஸ்லாமியர்களுக்கு உதவுவதோடு பெண் குழந்தைகளின் கல்விக்காக தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அன்வர் ராஜா வலியுறுத்தியுள்ளார்.

    சிறுபான்மையினர் வேதனை

    சிறுபான்மையினர் வேதனை

    இதே போன்று திமுகவின் சல்மாவும் ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பல வருடமாக நடைமுறையில் இருக்கும் ஹஜ் மானியம் வழங்கும் முறையை மத்திய அரசு திடீரென நிறுத்துவதாக அறிவிக்கிறது. இந்த அறிவிப்பானது சிறுபான்மையினரின் நம்பிக்கையை தொடர்ந்து சந்தேகப்பட வைப்பதாகவே பார்க்கப்படுகிறது. திடீரென ஏதோ காரணத்தை சொல்லி ஹஜ் மானியத்தை ரத்து செய்வது சிறுபான்மையினருக்கு வேதனையைத் தான் தரும் என்றும் ஹஜ் மானியத்தை உடனடியாக நிறுத்துவதற்கான தேவை என்ன என்ற கேள்வி எழுவதாகவும் சல்மா தெரிவித்துள்ளார்.

    English summary
    Centre's decision to stop subsidy for Haj travel raised opposition from DMK and ADMK. ADMK MP Anwar raja urges centre to withdraw the deision as it is against of muslims.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X