For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி விவகாரம்: அதிமுக எம்பி முத்துக்கருப்பன் ராஜிநாமா அறிவிப்பு!

By BBC News தமிழ்
|
காவிரி விவகாரம்: அதிமுக எம்பி முத்துக்கருப்பன் ராஜிநாமா அறிவிப்பு!
Getty Images
காவிரி விவகாரம்: அதிமுக எம்பி முத்துக்கருப்பன் ராஜிநாமா அறிவிப்பு!

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதததை கண்டித்து அதிமுக எம்பி முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது என அதிமுக எம் பி முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஜெயலலிதா போராடியதாகவும், ஜெயலலிதா வழங்கிய இந்த பதவியை காவிரி விவாகரத்திற்காக இழப்பதில் தனக்கு கவலை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்வதாகவும் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி, ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் தன் மனதை மாற்றி விடுவார்கள் என்ற அச்சத்தில் தன் அலைப்பேசியை அணைத்து வைத்துள்ளதாக அவர் கூறினார்.

வாரியம் அமைத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முத்துக்கருப்பன், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை என்றால் அது என்ன அரசு என்று கேள்வி எழுப்பினார்.

பிற செய்திகள்:

'பூப்படைதல் நிகழ்ச்சி' சிறுமிகளுக்கு பிடித்துள்ளதா? #BBCShe

வளிமண்டலத்துக்குள் நுழைந்த சீன விண்வெளி நிலையம் - தென் பசிஃபிக் பகுதியில் விழும்

அமெரிக்க பொருட்களுக்கு சீனா 3 பில்லியன் டாலர்கள் வரி

காவிரி மேலாண்மை வாரியம்: அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடி

BBC Tamil
English summary
ADMK MP Muthukaruppan has resigned his post over Cauvery issue. He has sent his resignation letter to Rajya Sabha Chairman M Venkaiah Naidu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X