For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேரறிவாளன் நிரபராதி அல்ல... அவரை விடுவிக்கக் கூடாது... அதிமுக எம்.பி. திடீர் போர்க்கொடி

பேரறிவாளன் நிரபராதி அல்ல என்றும் அவரை விடுவிக்கக் கூடாது என்றும் ராஜ்யசபா அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    பேரறிவாளனை விடுவிக்கக் கூடாது... அதிமுக எம்.பி. திடீர் போர்க்கொடி- வீடியோ

    சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவரான பேரறிவாளனை விடுவிக்கக் கூடாது என்று அதிமுக எம்.பி.யும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.

    கடந்த 1991-ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு சென்னை ஸ்ரீபெரும்புதூருக்கு வந்த அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி குண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

    இந்நிலையில் 26 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் கோரி வருகின்றனர்.

     முன்னாள் சிபிஐ அதிகாரி

    முன்னாள் சிபிஐ அதிகாரி

    இந்நிலையில் முன்னாள் சிபிஐ அதிகாரி தியாகராஜனும், முன்னாள் நீதிபதி தாமஸும் பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். முன்னாள் நீதிபதி தாமஸ் கூறுகையில், பேரறிவாளனை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை கருணை அடிப்படையில் விடுவிக்க பரிந்துரைக்க வேண்டும் என்று கடிதமும் எழுதியுள்ளார்.

     பல்வேறு அமைப்புகள்

    பல்வேறு அமைப்புகள்

    இதேபோல் ஆயுள் தண்டனைக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்ற கருத்தை எதிர்த்து அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

     நிரபராதி அல்ல

    நிரபராதி அல்ல

    இதுகுறித்து அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கூறுகையில் பேரறிவாளனை விடுவிக்கக் கூடாது. பேரறிவாளனை நிரபராதி என்று அரசியல் கட்சிகள் கூறுவது வேதனை அளிக்கிறது.

     காங்கிரஸ் மௌனம் ஏன்

    காங்கிரஸ் மௌனம் ஏன்

    வழக்கின் மீது நான் கொண்ட ஈடுபட்டால் கருத்தை பதிவு செய்கிறேன். பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு காங். தரப்பு மௌனம் காப்பது ஏன். ராஜீவ் காந்திக்கு காங்கிரஸ் கட்சி செய்கின்ற அஞ்சலி இதுதானா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

     தமாகாவில்....

    தமாகாவில்....

    அதிமுக எம்.பி.யாக உள்ள எஸ்.ஆர். பாலசுப்பிரணியன் முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அதன்பின்னர் அங்கிருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக ஜெயலலிதாவை சந்தித்த பாலசுப்பிரமணியன் அதிமுகவில் இணைந்தார். அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    ADMK MP S.R.Balasubramaniyan opposes to release Rajiv Gandhi convict Perarivalan. He also concerns over Congress party for keeping silent over his release.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X