For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவுக்கான பிரத்யேக சானல் இதோ வந்து விட்டது.. நியூஸ் ஜே!

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுகவுக்கான பிரத்யேக சேனல் வர போகிறது- வீடியோ

    சென்னை: அதிமுக சார்பில் ஒரு புது சேனல் ஒன்று தயாராகிவிட்டது.

    உள்ளுக்குள் புகைந்து கொண்டு, என்னதான் இருவருக்குள்ளும் பிரச்சனை என்று தெரியாமல், எப்போது ஈபிஎஸ்-சும், ஓபிஎஸ்-சும் பிரிய போகிறார்களோ என்ற பேச்சு கடந்த வாரம் முழுவதும் அடிபட்டது. இதற்கு காரணம் முக்கிய நபர்கள் சிலர் தனித்தனியாக மதுசூதனை சென்று பார்த்துவிட்டு வந்ததுதான்.

    அதிமுகவுக்குள் உள்கட்சி பூசல் என்று பரவலாக பேசிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் முதல்வரும், துணை முதல்வரும் சேர்ந்து ஒரு புது சேனலை ஆரம்பிக்க போகிறார்கள்.

    பறிபோன ஜெயா டிவி

    பறிபோன ஜெயா டிவி

    இந்த சேனல் ஆரம்பிக்க அடிப்படை காரணம், ஜெயா டிவி இவர்களின் கையை விட்டு போனதுதான். ஜெயலலிதா இருந்தவரை எல்லோருமே இந்த சேனலைதான் தங்கள் கட்சிக்கு பலமாக, உரமாக பயன்படுத்தினார்கள். ஆனால் அவர் மறைந்தபிறகு நடைபெற்ற பல்வேறு சூழல் காரணமாக டிடிவி தினகரனின் வசம் முழுவதுமாக ஜெயா டிவி போய்விட்டது.

    பெரிய குறை

    பெரிய குறை

    இதனால் அதிமுக என்ற பலம் வாய்ந்த கட்சிக்கு என்று தனியாக சேனல் இல்லை. அதுமட்டுமல்லாமல் தற்போது அனைத்து கட்சியை சேர்ந்தவர்களுமே தங்களுக்கென்றும், தங்கள் கட்சியின் செய்தி, கொள்கைகளை பரப்புவதற்கும் தனியாகவே டிவி ஆரம்பித்து செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, தமிழகத்தின் பிரதான கட்சியான, அதிலும் ஆளும் கட்சியான அதிமுகவுக்கு ஒரு டிவி இல்லாதது ஒரு பெரிய குறைதான்.

    ஈபிஎஸ் - ஓபிஎஸ்

    ஈபிஎஸ் - ஓபிஎஸ்

    அதற்காகத்தான் தற்போது இந்த முயற்சியில் ஈடுபட்டு புதிதாக அதிமுகவுக்கு என்று ஒரு சேனலை ஆரம்பித்துள்ளார்கள். இது ஒரு நியூஸ் சேனல் என்று கூறப்படுகிறது. இந்த சேனலுக்கான அனைத்து வேலைகளும் தயாராக நடைபெற்று முடிந்துள்ளன. இந்த சேனல் ஆரம்பிக்க முழு காரணமும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும்தான்.

    நியூஸ் ஜெ

    நியூஸ் ஜெ

    இந்த நியூஸ் சேனலுக்கு பெயர் கூட வைத்துவிட்டார்கள். ஜெயலலிதா பெயரிலேயே "நியூஸ் ஜெ" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புதிய டி.வி. சோதனை ஓட்டம் வருகிற 12-ந்தேதி முதல் தொடங்குகிறது. இதனை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சென்னை கலைவாணர் அரங்கத்தில் அன்று மாலை 6 மணிக்கு இந்த சேனலை இணைந்து தொடங்கி வைக்கிறார்கள். டி.வி.யின் லோகோ, மொபைல் ஆப் போன்றவை அன்று தொடங்கப்படுகிறது.

    ஜெயா டிவியை மிஞ்சுமா?

    அநேகமாக இம்மாத இறுதியில் இந்த புதிய சேனல் ஒளிபரப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படி இந்த மாத இறுதியில் இந்த சேனல் வந்துவிட்டால், கண்டிப்பாக நடைபெற உள்ள 2 முக்கிய இடைத்தேர்தல்களுக்கு மிகவும் தூணாக இருக்கும். அதிமுக அரசுக்கு பலம் சேர்க்கும் வகையில் இந்த நியூஸ் ஜெ... இருக்குமா? அல்லது ஜெயா டிவியை மிஞ்சி தன் பலத்தையும், திறனையும் நியூஸ் ஜெ... காட்டுமா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

    English summary
    ADMK Official to launch its own TV Channel "News-J"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X