For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. இலாகா இல்லாத முதல்வர்? எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக அரசு? #jayalalithaa

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பும் வரை ஜெயலலிதா இலாகா இல்லா முதல்வராக இருப்பார் என்றும் அவர் வசம் தற்போது உள்ள இலாகாக்கள் மூத்த அமைச்சர்களான ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 2 வாரங்களாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நீண்டகாலம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை கூறியுள்ளது.

இதையடுத்து இடைக்கால முதல்வர் அல்லது பொறுப்பு முதல்வர் ஒருவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆளுநர் வித்யாசகர் ராவ் இதனை வலியுறுத்தி இருக்கிறார்.

இலாகாக்கள் பகிர்வு

இலாகாக்கள் பகிர்வு

ஆனால் இதற்கு அமைச்சர்கள் இருவரும் ஒப்புக் கொள்ளவில்லை. மாற்றாக முதல்வர் ஜெயலலிதா வசம் உள்ள இலாகாக்களை மூத்த அமைச்சர்கள் பகிர்ந்து கொள்கிறோம் எனவும் ஆளுநரிடம் கூறப்பட்டுள்ளது.

ஓபிஎஸ், எடப்பாடி

ஓபிஎஸ், எடப்பாடி

அதாவது தற்போது ஜெயலலிதா வசம் பொதுநிர்வாகம், உள்துறை உள்ளிட்ட இலாகாக்கள் உள்ளன. இவற்றை மூத்த அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் பகிர்ந்து கொள்ளப்படக் கூடும் என தெரிகிறது.

யார் தலைமையில் கேபினட்?

யார் தலைமையில் கேபினட்?

அதே நேரத்தில் அமைச்சரவை கூட்டங்களுக்கு தலைமை வகிப்பது யார்? அரசாங்கத்தை வழிநடத்துவது யார் என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கு முன்னர் முதல்வராக இருந்த அண்ணாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோதும் எம்ஜிஆர் உடல்நலம் பாதிக்கப்பட்ட போதும் நெடுஞ்செழியன்தான் அரசாங்கத்தை வழிநடத்தினார்; அவர்தான் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு தலைமை வகித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி...

எடப்பாடி பழனிச்சாமி...

அதேபாணியில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அரசாங்கத்தை வழிநடத்த மன்னார்குடி தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா உடல்நிலை உள்ளிட்ட ஆட்சி, கட்சி விவகாரங்கள் அனைத்துமே மன்னார்குடி தரப்பு எடப்பாடி பழனிச்சாமியிடமே விவாதிக்கிறது. ஓ பன்னீர்செல்வத்திடம் எதனையும் பகிர்ந்துகொள்வதில்லையாம். இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கே அரசை வழிநடத்தும் வாய்ப்பு கிடைக்கக் கூடும். வழக்கம்போல அமைச்சரவையில் 2-வது இடத்தில் ஓ. பன்னீர்செல்வம் தொடருவார் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.

English summary
ADMK is examining the possibility of reallocating the portfolios held by Jayalalithaa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X