For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் முக்கியக் கட்சிகள்?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க சில முக்கியக் கட்சிகள் களம் இறங்கியுள்ளதாக அதிமுக தலைமைக்கு சந்தேகம் வந்துள்ளதாம். இதையடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனராம்.

ஒவ்வொரு எம்.எல்.ஏவின் நடமாட்டமும் கண்காணிக்கப்படுகிறதாம். தற்போது முதல்வர் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியும் இல்லை என்பதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என அதிமுக தலைமை சந்தேகப்படுகிறதாம். குறிப்பாக 2 முக்கியக் கட்சிகள் மீது அதற்கு சந்தேகம் உள்ளதாம். சில முக்கியத் தொழிலதிபர்களைப் பயன்படுத்தி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த அவை முயல்வதாக அதிமுக தலைமை சந்தேகப்படுகிறதாம்.

ADMK suspects foulplay by some parties

இதனால் தனது கட்சி எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரையும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதாம் அதிமுக தலைமை. அவர்கள் யாரும் விலை போய் விடாமல் தடுக்கும் நடவடிக்கைகளையும் அது முடுக்கி விட்டுள்ளதாம்.

சசிகலாவின் கட்டுப்பாட்டில் ஆட்சியும், கட்சியும் உள்ளது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. இந்த நிலையில் தற்போது சசிகலா ஆட்சியின் செயல்பாடுகளை தலைமைச் செயலாளர் ராம் மோகன ராவிடம் முழுமையாக விட்டுள்ளாராம். அவர் சொல்வதை அப்படியே கேட்கிறாராம் சசிகலா. அதேசமயம், கட்சியின் நிர்வாகத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளாராம்.

முதல்வர் ஜெயலலிதா சுகவீனமாக இருப்பதால் இரு முக்கியக் கட்சிகள் சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருப்பதாக அதிமுக தலைமை அஞ்சுகிறது. சரியான சமயத்தில் கட்சியை உடைத்து ஆட்சியைக் கைப்பற்ற அவை காத்திருப்பதாகவும், முயல்வதாகவும் அதிமுக தலைமை சந்தேகப்படுகிறது. குறிப்பாக சசிகலாவுக்கு அந்த சந்தேகம் அதிகமாகவே உள்ளது.

எனவே தனது கட்சி எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரையும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாம். எந்தத் தொழிலதிபர் தரப்பிலிருந்தாவது யாரேனும் அவர்களைச் சந்திக்கின்றனரா என்பது முக்கியமாக கண்காணிக்கப்படுகிறதாம். கட்சியினர் யாரும் எதிர்க்கட்சியினரின் சதிக்கு இரையாகி விடக் கூடாது என்றும் எம்.எல்.ஏக்களுக்கு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டு வருகிறதாம்.

அம்மா திரும்பி வரும் வரை அனைவரும் பொறுமை காக்க வேண்டும், கட்டுக்கோப்போடு இருந்து எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட அதிமுகவை காக்க வேண்டும் என்று சென்டிமென்டலாக அதிமுக எம்.எல்ஏக்களிடம் பேசியுள்ளனராம்.

இருப்பினும் சசிகலா குரூப்பால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் நிச்சயம் அணி மாறக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அவர்களை கணக்கெடுத்து சரிக்கட்டும் முயற்சியிலும் தலைவர்கள் இறங்கியுள்ளனராம். மொத்தத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் தற்போது அவர்களுக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமோ கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது மட்டும் உண்மை.

English summary
ADMK suspects that some key parties may buy some of its MLAs to topple the ADMK Govt in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X