For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. மறைந்து இன்றோடு 30 நாள்... கண்ணீரில் தொண்டர்கள்.. மவுன ஊர்வலம்.. நினைவிடத்தில் திரளும் கூட்டம்

ஜெயலலிதா மறைந்து 30ஆம் நாள் நிறைவடைந்ததை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் அவரது உருவப்படத்திற்கு மரலரஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் கூட்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் நாள் உடல்நலக்குறைவினால் மரணமடைந்தார். அவரது உடல் ராஜாஜி அரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது லட்சக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்த திரண்டனர். எனினும் 10 மணி நேரம் மட்டும் ஜெயலலிதாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்களும் சென்னைக்கு வந்து ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு செல்கின்றனர்.

30ஆம் நாள் நினைவஞ்சலி

30ஆம் நாள் நினைவஞ்சலி

ஜெயலலிதா மறைந்து 30 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழகத்தில் பல பகுதிகளில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.

அன்னதானம்

அன்னதானம்

காடாம்புலியூரில் அதிமுக சார்பில் ஜெயலலிதா 30வது நினைவு நளையொட்டி முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தேவநாதன் தலைமையில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான அதிமுகவினர் திராளாக கலந்துகொண்டு அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

நினைவிடத்தில் திரளும் கூட்டம்

நினைவிடத்தில் திரளும் கூட்டம்

ஜெயலலிதா மறைந்து 30 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு துக்கம் அனுசரிக்கும் விதமாக தொண்டர்கள் மவுன ஊர்வலமாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வரும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்களுக்கு, அதிமுக சார்பில் குடிநீர், உணவுப் பொட்டலங்கள், மருத்துவ வசதி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

புதுச்சேரியில் நினைவுநாள்

புதுச்சேரியில் நினைவுநாள்

புதுச்சேரியில் 30ம் நாள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

English summary
ADMK workers paid tribute to Jayalalithaa on day 30.Remembering former Tamil Nadu chief minister J. Jayalalithaa, her supporters visiting burial place at Merina beach.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X