For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. விடுதலையின் போதும் அதிமுகவினர் இதையேதான் செய்தார்கள்.. சைக்கில் கேப்பில் கொளுத்திபோட்ட சு சாமி!

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை பெற்ற அதிமுகவினர் இதையேதான் செய்தார்கள் என சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    2ஜி: ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகள் நேர்மையாக செயல்படவில்லை- வீடியோ

    சென்னை: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை பெற்ற அதிமுகவினர் இதையேதான் செய்தார்கள் என சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

    நாட்டையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கிய 2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி கனிமொழி, ஆ ராசா உள்ளிட்ட 14 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    கிட்டதட்ட 10 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் திமுகவுக்கு சாதகமாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை திமுகவினர் வெடி வெடித்தும் இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடினர்.

    பின்பற்றப்படவில்லை..

    பின்பற்றப்படவில்லை..

    இந்நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவித்துள்ளார். 2ஜி வழக்கில் குற்றவியல் நடைமுறை எதுவும் பின்பற்றப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

    தீவிரமாக இல்லை..

    தீவிரமாக இல்லை..

    2ஜி வழக்கில் பின்னடைவு ஏற்படவில்லை என்ற அவர், வழக்கறிஞர்கள் ஊழலுக்கு எதிராக போராடுவது தீவிரமாக இல்லை என்றும் சுப்பிரமணிய சாமி தெரிவித்தார்.

    அதிமுகவினரும் இப்படிதான்

    அதிமுகவினரும் இப்படிதான்

    ஜெயலலிதா நிரபாரதி என விடுதலை செய்யப்பட்ட போது அதிமுகவினரும் இப்படிதான் கொண்டாடினர் என்றார். ஆனல் 6 மாதம் கழித்து உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியது என்றும் சுப்பிரமணியயசாமி தெரிவித்தார்.

    நல்ல தீர்ப்பு வரும்

    நல்ல தீர்ப்பு வரும்

    அதேபோல் 2ஜி வழக்கிலும் மேல்முறையீடு செய்தால் நல்ல தீர்ப்பு வரும் என அவர் கூறினார். மேலும் 2ஜி தீர்ப்பை எதிர்த்த டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் சுப்பிரமணிய சாமி கூறினார்.

    English summary
    ADMK workers also did the same for Jayalalitha release said Subramaniya sami. Subramaniya sami belives that 2G case accused will get punishment.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X