For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரட்டை இலைச்சின்னம் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு ஒதுக்கியதாக தகவல்.. அதிமுகவினர் குத்தாட்டம் கொண்டாட்டம்

இரட்டை இலைச்சின்னம் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் வெடி வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    எடப்பாடி பழனிச்சாமி பிரஸ் மீட் | அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்- வீடியோ

    சென்னை: இரட்டை இலைச்சின்னம் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் வெடி வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

    இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிக்கு ஒதுக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ஒப்புக்கொண்டுள்ளார்.

    ADMK workers firing crackers and sharing sweets to each

    ஆதாரங்களை வழங்கியதாலேயே தங்களுக்கு இரட்டை இலைச்சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். அதிமுக அமைச்சர்களும் இரட்டை இலைச்சின்னம் தங்களுக்கு கிடைத்துவிட்டதாக தெரிவித்து வருகின்றனர்.

    ஆனாலும் தேர்தல் ஆணையத்தில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இரட்டை இலைச்சின்னம் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்புக்கு வழங்கப்பட்டதாக வெளியான தகவலால் அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    ADMK workers firing crackers and sharing sweets to each

    சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் திரண்ட தொண்டர்கள் வெடி வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பலர் ஆனந்த குத்தாட்டம் போட்டும் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

    இதேபோல் தமிழகத்தின் பல இடங்களிலும் அதிமுக தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    English summary
    ADMK workers enjoying the information about double leaf symbol for EPS OPS team. ADMK workers firing crackers and sharing sweets to each.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X