For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா விரைவில் நலம் பெற 7 ஆயிரம் பெண்கள் பால்குடம்... அலகு குத்தி வழிபாடு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : ஜெயலலிதா பூரண குணமடைந்து நீடூழி வாழ வேண்டி வடசென்னை வடக்கு மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் இன்று ஆர்.கே.நகர் தொகுதியில் 7 ஆயிரம் பெண்கள் பால்குடம் எடுத்து வந்து தண்டையார்பேட்டை சேணியம்மன் கோவில் அம்மனுக்கு குடம் குடமாக பால் அபிஷேகம் செய்து சிறப்பு பிரார்த்தனை வழிபட்டனர்.

முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சர்டு தலைமையிலான மருத்துவ குழுவும் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து நீடூழி வாழ வேண்டி தமிழகம் முழுவதும் பொதுமக்களும், தொண்டர்களும் கோவில்களில் அபிஷேகம், விசேஷ பிரார்த்தனை செய்து வருகிறார்கள். தினசரி கோவில்களில் இதுபோன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

ADMK workers prayers for Jayalalithaa speedy recovery

தொண்டர்கள் பால்குடம்

வடசென்னை வடக்கு மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற மாவட்ட செயலாளர் பி.வெற்றிவேல் எம்.எல்.ஏ இன்று ஏற்பாடு செய்திருந்தார். 38வது வட்டம் நேதாஜி நகர் அருள்மிகு முருகன் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது. ஜெயலலிதா படத்தை பிடித்தபடி ஊர்வலத்தின் முன்னதாக முக்கிய பிரமுகர்கள் நடந்து சென்றனர். இதனை தொடர்ந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் பால்குடம் சுமந்து சென்றார்கள்.

ADMK workers prayers for Jayalalithaa speedy recovery

அலகு குத்திய தொண்டர்

தொண்டர் ஒருவர் உடம்பில் முதுகு பகுதியில் கொக்கிகளை குத்தி கிரேனில் தொங்கியபடி ஜெயலலிதா படத்துடன் வாழ்த்து கோஷம் எழுப்பியபடி வந்தார். வைத்தியநாதன் பாலம், திருவெற்றியூர் நெடுஞ்சாலை, கேசவன் தெரு வழியாக சேணியம்மன் கோவிலை ஊர்வலம் சென்றடைந்தது.

ADMK workers prayers for Jayalalithaa speedy recovery

அம்மனுக்கு அபிஷேகம்

சேணியம்மன் கோவிலை ஊர்வலம் சென்றடைந்ததும் அங்கு அம்மனுக்கு குடம் குடமாக பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான அண்ணா தி.மு.க.வினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

English summary
Tamil Nadu Chief Minister Jayalalithaa is undergoing treatment at Apollo Hospitals in Chennai,R.K.Nagar people are praying for her speedy recovery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X