For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிக சொத்து வைத்திருக்கும் கட்சியில் திமுகவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியாவில் அதிக சொத்து வைத்துள்ள மாநில கட்சி எது தெரியுமா ?

    டெல்லி : மாநிலக்கட்சிகள் வெளியிட்டுள்ள சொத்து விவரங்களின் அடிப்படையில் சமாஜ்வாதி கட்சிக்கு அதிக சொத்துகள் இருப்பதாக ஏடிஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சிக்கு அடுத்தபடியாக திமுகவிற்கு அதிக சொத்துகள் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

    அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு ரூ. 634.96 கோடி சொத்து இருப்பதாக 2015-16 நிதியாண்டில் கூறியுள்ளது. இதன்படி நாட்டில் உள்ள 20 மாநில கட்சிகளில் முதல் இடத்தை சமாஜ்வாதி கட்சி பிடித்துள்ளது, இரண்டாவது இடத்தில் ரூ. 257.18 கோடி சொத்துகளுடன் திமுகவும், அதனைத் தொடர்ந்து ரூ. 224.84 கோடி சொத்துடன் அதிமுக அடுத்த இடத்திலும் இருக்கிறது.

    2011-12 நிதியாண்டில் கட்சிகள் தாக்கல் செய்த சொத்து விவரங்களின்படி சமாஜ்வாதி கட்சி தங்களுக்கு ரூ. 212.86 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இது 2015 - 16 காலகட்டத்தில் 198 மடங்கு உயர்ந்து ரூ. 634.96 கோடியாக இருக்கிறது.

    155% அதிகரித்த அதிமுக சொத்து

    155% அதிகரித்த அதிமுக சொத்து

    அதிமுகவின் சொத்து மதிப்பானது 2011-12 காலகட்டத்தில் இருந்ததைவிட 155 சதவீதம் அதிகரித்துள்ளது. சுமார் ரூ. 88.21 கோடி அளவிற்கு உயர்ந்து தற்போது ரூ. 224.87 கோடி அளவிற்கு சொத்து இருப்பதாக ஜனநாயக சீரமைப்பு கழகத்தின் அறிக்கை கூறுகிறது.

    எப்படி சொத்துக் கணக்கிடப்படுகிறது?

    எப்படி சொத்துக் கணக்கிடப்படுகிறது?

    மாநில கட்சிகள் 6 பிரிவுகளின் கீழ் தங்களது சொத்து விவரங்களை தெரிவித்துள்ளன. நிரந்திர சொத்து, கடன்கள் மற்றும் முன்பணங்கள், வைப்புத் தொகைகள், டிடிஎஸ், முதலீடுகள் மற்றும் இதர சொத்துகள் உள்ளிட்ட பிரிவுகளில் சொத்துகளின் மதிப்பு கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

    வைப்புத் தொகை அதிகரித்துள்ளது

    வைப்புத் தொகை அதிகரித்துள்ளது

    2011 - 12 நிதியாண்டில் மாநில கட்சிகள் அதிகபட்ச வைப்பு தொகையாக ரூ. 331.54 கோடி என கணக்கு தாக்கல் செய்துள்ளன. 2015 - 16 நிதியாண்டில் இந்த வைப்புத் தொகையானது ரூ. 1054. 80 கோடியாக உயர்ந்துள்ளது. மதிப்புகள் குறைந்ததாக கட்சிகள் கூறியுள்ளதென்றால் அது கடன்கள் மற்றும் முன்பணங்களில் மட்டுமே சரிவை கண்டுள்ளது. 2011 - 12 நிதியாண்டில் கட்சிகள் ரூ. 19.75 கோடி முதலீடு செய்துள்ளன, அவை தற்போது ரூ. 16.20 கோடி என கணக்கிடப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.

    ஆம்ஆத்மி, ஒய்எஸ்ஆர் கட்சியின் சொத்துகள்

    ஆம்ஆத்மி, ஒய்எஸ்ஆர் கட்சியின் சொத்துகள்

    மார்ச் 2011ம் ஆண்டில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், 2012 நவம்பரில் ஆம் ஆத்மி கட்சிகளும் புதிய கட்சிகளாக பதிவு செய்துள்ளன. இந்த இரண்டு கட்சிகள் தாக்கல் செய்துள்ள கட்சியின் சொத்து விவரங்களை பொறுத்தமட்டில் 2012 - 13 நிதியாண்டில் ரூ. 1.165 கோடியாக இருந்தது 2015 - 16 நிதியாண்டில் ரூ. 3.765ஆக உயர்ந்துள்ளதாக ஏடிஆர் அறிக்கை கூறுகிறது.

    English summary
    ADR report : Samajwadi Party declared assets worth Rs 634.96 crore in the financial year 2015-16 topping the chart among 20 regional parties followed by Rs 257.18 crore of DMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X