For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புலிகளின் ஈழம்.. 'ஆப்கன் கேர்ள்' போட்டோகிராபர் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்

ஆப்கன் கேர்ள் புகழ் புகைப்படக் கலைஞர் ஸ்டீவ் மெக்கர்ரி, ஈழம் குறித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரல் ஆகியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: விடுதலைப் புலிகளின் ஆளுகையில் ஈழம் இருந்தபோது எப்படி இருந்தது என்பதை விளக்கும் ஒரு அருமையான புகைப்படத்தை அமெரிக்க புகைப்படக் கலைஞர் ஸ்டீவன் மெக்கர்ரி வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படத்திற்கு சிங்களர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்திட்டு வருகின்றனர். அதற்கு தமிழர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். சிங்களர்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து இந்தப் புகைப்படத்தை அகற்றாமல் வைத்துள்ளார் மெக்கர்ரி.

Afghan Girl fame US photographer's Eelam photo goes viral

இந்தப் புகைப்படத்தில் வயல் வெளி ஒன்றில் ஒரு விவசாயி ஏர் பூட்டி உழுதுகொண்டிருக்கிறார். மறுபுறம் விடுதலைப் புலிகள் வீரர்களும், வீராங்கனைகளும் வரிசையாக வரப்பு மீது நடந்து வரும் காட்சி உள்ளது.

விடுதலைப் புலிகள் வசம் இருந்தபோது ஈழ மக்கள் எந்த அளவுக்கு நிம்மதியாக இருந்தனர், தங்களது வழக்கமான வேலைகளை எப்படி நிம்மதியாக செய்து வந்தனர் அதை விட முக்கியமாக அவர்களது நிலம் அவர்களிடமே இருந்தது என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் புகைப்படம் அமைந்துள்ளது.

மெக்கர்ரி அமெரிக்காவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆவார். இவரை டக்கென புரிந்து கொள்ள வேண்டுமானால்.. இவர்தான் வித்தியாசமான கண்களுடன் கூடிய ஆப்கானிஸ்தான் பெண்ணை புகைப்படம் எடுத்துப் பிரபலமானவர். 1984ம் ஆண்டு ஆப்கன் கேர்ள் என்ற பெயரில் இந்தப் புகைப்படம் அப்போது நேஷனல் ஜியாகிரபி புத்தகத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றதாகும்.

ஏராளமான விருதுகளையும் குவித்துள்ள மெக்கர்ரியின் இந்த ஈழத்துப் புகைப்படம் தற்போது வைரல் ஆகியுள்ளது.

English summary
Afghan Girl fame US photographer Steve McCurry's photograph on Tamil Eelam has become viral and Tamils are hailing this image and the LTTE's contribution to the Eelam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X