For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முடிவுக்குவந்தது பட்டாசு உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்– அமைச்சரின் வாக்குறுதியை ஏற்று நடவடிக்கை

25 நாட்களாகநடந்த பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தம்வாபஸ் பெறப்படுவதாக ஆலை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

விருதுநகர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த உறுதியைஏற்று 25 நாட்களாக நடந்த பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக ஆலை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

மத்திய சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்குஅளிக்க வேண்டும், பட்டாசு உற்பத்தி தடைதொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்துவிசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.

After 25 days Firecracker factory owners call off their strike

பட்டாசு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மறியல் போன்றவை நடந்துவந்த நிலையில், இன்று 25-வது நாளாக போராட்டம்நீடித்தது. இதன் காரணமாக பட்டாசுமற்றும் அதன் உபதொழிலை நம்பியிருக்கும்5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் அளிக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

அமைச்சரின் வாக்குறுதியை அடுத்து, 25 நாட்களாக நடந்த வேலை நிறுத்தத்தைவாபஸ் பெறுவதாக ஆலை உரிமையாளர்கள் அறிவித்தனர். வரும் திங்கள் முதல் பட்டாசுஆலைகள் வழக்கம் போல செயல்படும்என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பட்டாசு தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சம்பந்தப்பட்டு வந்த லட்சகணக்கான தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

English summary
After considering the Minister Rajendra balajis assurance Fire cracker factory owners call off their strikes. After 25 days of strike from Monday fire cracker factories are going to be in the wheel
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X