For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

18 ஆண்டுகள் இழுத்தடித்து கடுமையான நீதிபதியிடம் தானே மாட்டிக் கொண்ட ஜெ.

By Mathi
Google Oneindia Tamil News

After an 18-year court battle Judge Cunha convicted Jaya in asset case
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கை 18 ஆண்டுகளாக எவ்வளவு இழுத்தடிக்க முடியுமோ இழுத்தடித்த ஜெயலலிதா, தம் மீதான தீர்ப்பு மிகக் கடுமை காட்டக் கூடிய ஒரு நீதிபதியிடம் சிக்கும் என்று அவரே நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.

ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு போடப்பட்டு 18 ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் எத்தனை வாய்ப்புகள் இருக்கிறதோ அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி இந்த வழக்கை இழுத்தடித்தது ஜெயலலிதா தரப்பு.

ஒவ்வொருமுறையும் சிறப்பு நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று மாற்றி மாற்றி வழக்குப் போட்டு இழுத்தடித்துப் பார்த்தார். அட தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட எத்தனையோ மனுக்களைத் தாக்கல் செய்துப் போட்டுவிட்டார்.

உச்சநீதிமன்றத்தில் நேற்றும் கூட ஒரு வழக்கைப் போட்டு தீர்ப்பை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் பார்த்தது ஜெயலலிதா தரப்பு. ஆனால் எதுவும் நடைபெறவில்லை.

இத்தனை போராட்டத்துக்கும் இழுத்தடிப்புக்கும் பயனில்லாமல் ஊழல் வழக்குகளில் மிகக் கடுமையான தீர்ப்பளிக்கக் கூடிய நீதிபதி குன்காவிடம் போய் தானே சிக்கி, தற்போது 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஒரு தீர்ப்பை ஜெயலலிதாவே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

English summary
After an 18-year court battle, special Judge John Michael Cunha John Michael Cunha convicted 66-year old Jayalalithaa, who is general secretary of the AIADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X