For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆளுநர் பன்வாரிலால் தூத்துக்குடி சென்றடைந்தார்.. சிகிச்சை பெறுபவர்களை நேரத்தில் சந்திக்கிறார்

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆளுநர் பன்வாரிலால் தூத்துக்குடி சென்றடைந்தார்-வீடியோ

    சென்னை: துணை முதல்வரை தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்போது தூத்துக்குடி சென்றுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை சற்று நேரத்தில் சந்திக்கிறார்.

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராடிய மக்கள் மீது கடந்த 22ம் தேதி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.

    After deputy CM, Governor goes to Tuticorin today

    இதில் 17 வயது பள்ளி மாணவி உள்பட 13 பேர் பலியாகினர். மக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் அரசாணையை தமிழக அரசு நேற்று மாலை பிறப்பித்தது.

    இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூற ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தூத்துக்குடி சென்றுள்ளார்.

    காலை 9 மணிக்கு அவர் விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதுடன் சம்பவம் நடந்த இடத்திற்கும் சென்று பார்வையிட உள்ளார்.

    தற்போது மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, எஸ்.பி. முரளி ரம்பா ஆகியோரை சந்தித்து விவரம் கேட்டறிந்து வருகிறார். மாலை 6 மணிக்கு அவர் சென்னைக்கு திரும்பிச் செல்கிறார்.

    முன்னதாக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று தூத்துக்குடிக்கு சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    After deputy CM O. Panneerselvam, governor Banwarilal Purohit is gooing to Tuticorin today. He will be there till evening.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X