For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"பொங்கல் பரிசு" நேற்று தா. பாண்டியன்.. இன்று பண்ருட்டி ராமச்சந்திரன்..

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் அண்ணா விருது என்ற பொங்கல் பரிசு வழங்கியிருப்பதன் மூலம் பண்ருட்டி ராமச்சந்திரன் தீவிர அரசியல் இருந்து ஒதுங்கியிருந்தாலும் கூட அதிமுக அணியில் மறைமுகமாக இணைக்கப்பட்டிருக்கிறார் என்றே கூறலாம்.

பொதுவாகவே விருதுகள், அரசுகளின் கரிசனைக்குரியவர்களுக்கே என்பது எழுதப்படாத நியதி. அது மத்திய அரசின் விருதானாலும் மாநில அர்சின் விருதானாலும் இதுவே சட்டம் போலாகிவிட்டது.

தமிழகத்திலும் அரசுகள் வழங்குகிற விருதுகள் சில நேரங்களில் அரசியலாகவும் மாறிவிடுவது உண்டு.

கடந்த ஆண்டு தா.பா.

கடந்த ஆண்டு தா.பா.

அறிவிக்கப்படாத அதிமுக மாவட்ட செயலர் ரேஞ்சுக்கு 'ஆதரவு' தெரிவித்துக் கொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியனுக்கு கடந்த ஆண்டு அம்பேத்கர் விருதை தமிழக அரசு வழங்கியது.

இந்த ஆண்டு பண்ருட்டியார்

இந்த ஆண்டு பண்ருட்டியார்

இந்த ஆண்டு தேமுதிகவில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அண்ணா விருது வழங்கி ஆச்சரியப்படுத்தியிருக்கிறது அதிமுக அரசு.

தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள்

தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள்

ஏற்கெனவே தேமுதிக எம்.எல்.ஏக்கள் 7 பேர் கட்சித் தலைமைக்கு எதிராக அதிமுகவுக்கு ஆதரவாக வெளிப்படையாகவே செயல்பட்டு வருகின்றனர்.

அரசியல் ஓய்வு

அரசியல் ஓய்வு

ஆனால் பண்ருட்டி ராமச்சந்திரன், தேமுதிக தலைமை மீது விமர்சனம் வைத்துவிட்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அதிமுகவில் மகன்?

அதிமுகவில் மகன்?

இருப்பினும் பண்ருட்டி ராமச்சந்திரன் மகன் அதிமுகவில் இணையப் போவதாக கூறப்பட்டது. இதை பண்ருட்டியார் மறுத்தும் இருந்தார்.

அண்ணா விருது

அண்ணா விருது

இந்நிலையில்தான் அண்ணா விருதை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதன் மூலம் அவர் அதிமுகவுக்கும் அரசுக்கும் ஆதரவாளராகக்கப்பட்டிருக்கிறார்.

இனி என்ன?

இனி என்ன?

இனி அதிமுக அரசை அவர் ஒருபோதும் விமர்சித்துப் பேசமாட்டார் என்றுதான் கூற வேண்டும். மீண்டும் தீவிர அரசியலுக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் திரும்பினால் முதல் இடமாக அதிமுகவுக்குப் போகவும் வாய்ப்பிருக்கிறது.

English summary
After the State govt. awarded Anna Award to Ex DMK leader Panruti Ramachandran, he may support ADMK in future.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X