For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்ரோல் டீசல் விலை திடீர் உயர்வு.. காலையில் காத்திருந்த ஷாக்.. சென்னையில் லிட்டர் எவ்வளவு தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    முற்றும் அமெரிக்கா ஈரான் மோதல்... மூன்றாம் உலக போர் வெடிக்குமா ?

    சென்னை: ஈராக் கமாண்டர் சுலைமானி கொல்லப்பட்டதை அடுத்து கச்சா எண்ணெய் கிடுகிடு என உயர்ந்துள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமையான இன்று பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை 9 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ 78.48 ஆக உயர்ந்துள்ளது. அது போல் டீசல் விலை 11 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ 72.39 உயர்ந்துள்ளது.

    அமெரிக்காவின் வான் தாக்குதல் ஈரான் நாட்டின் புரட்சி பாதுகாப்பு படையின் குத்ஸ் படைப்பிரிவு தளபதி காசிம் சுலைமானி ஹஷீத் கிளர்ச்சி குழுவின் முக்கிய கமெண்டர் அபு மகாதி உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.

    அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தினால்.. மோசமான விளைவுகளை சந்திப்பீர்.. ஈரானுக்கு டிரம்ப் வார்னிங் அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தினால்.. மோசமான விளைவுகளை சந்திப்பீர்.. ஈரானுக்கு டிரம்ப் வார்னிங்

    கச்சா எண்ணெயின் விலை

    கச்சா எண்ணெயின் விலை

    கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலக அளவில் முக்கியமான இருக்கும் நாடுகளில் ஈரானும் ஒன்றாகும். இந்த தாக்குதலுக்கு பிறகு, மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர் ஏற்படும் அச்சத்தில் கச்சா எண்ணெயின் விலை திடீரென அதிகரித்துள்ளது.

    பெட்ரோல் டீசல்

    பெட்ரோல் டீசல்

    ர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை திடீரென 4.4 சதவீதம் அதிகரித்து 69.16 டாலராக உயர்ந்துள்ளது. வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் சந்தையில் 4.3 சதவீதம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து 63.84 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.

    11 காசுகள்

    11 காசுகள்

    அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.78.48ஆக விற்கப்படுகிறது. இதேபோல் டீசல் விலையும் 11 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.72.39 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.

    பெட்ரோல்

    பெட்ரோல்

    இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை அதுவும் காலையில் பெட்ரோல் போட வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திங்கள்கிழமை நாளை எத்தனை பேர் ஷாக்காக போகிறார்களோ?

    English summary
    After Sulaimani's death, There is a hike in Petrol and Diesel prices. Motorist gets shocked in the Sunday morning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X