தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய மழை.. இன்றும் கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை: தமிழகத்தில் நேற்று இரவு முழுக்க பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
அக்னி வெயில் நிலவி வரும் வேளையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முழுக்க மழை பெய்தது. தற்போது தமிழகத்தில் கோடை மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக இந்த மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு தமிழகத்தில் வேலூர், தருமபுரி, கரூர்,திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதேபோல் சென்னையில் சில இடங்களில் இரவு மழை பெய்தது.

அதேபோல் கொடைக்கானல், மதுரை, காஞ்சிபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், சத்தியமங்கலம், ஆரணி ஆகிய இடங்களில், நேற்று மாலையில் இருந்தே மழை பெய்தது. சில இடங்களில் மழையால் மரம் விழுந்தது. பெரும்பாலான இடங்களில் கனமழை காரணமாக மின்சாரம் மொத்தமாக தடைபட்டது.
இந்த வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் பேராசிரியர் அன்பழகன்.. தொடர் மருத்துவ கண்காணிப்பு
டெல்டா மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, குமரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும்.
இன்று சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இந்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.