For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. கைது வன்முறை: இதுவரை 7,000 பேர் முன் எச்சரிக்கையாக கைது- நீதிமன்றத்தில் அரசு அறிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

AG Submits Status Report on Law and Order Situation
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியான செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 ஆயிரத்து 193 பேர் கைது செய்யப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை சார்பில் தாக்கல் செய்துள்ளது.

பெங்களூர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி, பா.ம.க. வழக்கறிஞர் கே.பாலு, வக்கீல் மில்டன், டிராபிக் ராமசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், இந்த சம்பவங்கள் குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி, தலைமைச் செயலரின் நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், ஜெயலலிதாவுக்கு செப்டம்பர் 27-ஆம் தேதி தீர்ப்பு அளிப்பதற்கு முந்தைய நாளில் டி.ஜி.பி. மற்றும் பல அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்யப்பட்டு, சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சிறப்பு பிரிவின் 38 கம்பெனி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சட்டம்-ஒழுங்கை கண்காணிக்க அனைத்து கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டது. செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 ஆயிரத்து 193 பேர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு குற்றங்களுக்காக 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதுதொடர்பாக 177 நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், போக்குவரத்து சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டு உள்ளது.

பள்ளிக்கல்வித்துறை

பள்ளி கல்வித்துறையின் இணைச் செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், சரஸ்வதி, ஆயுத பூஜைகளுக்காக செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் 7ஆம் தேதியும் விடுமுறை என்று தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.

இதற்காக அரசின் அனுமதியை அவர்கள் பெறவில்லை. அக்டோபர் 7-ஆம் தேதியன்று 35 ஆயிரத்து 177 தொடக்கப்பள்ளிகளும், 9 ஆயிரத்து 759 நடுநிலைப்பள்ளிகளும், 5 ஆயிரத்து 602 உயர் நிலைப்பள்ளிகளும், 6 ஆயிரத்து 299 மேல் நிலைப்பள்ளிகளும் செயல்பட்டன.

சில பள்ளிகள் மட்டும் ஆங்காங்குள்ள மதவிழா மற்றும் வேறு காரணங்களுக்காக திறக்கப்படவில்லை. மற்றபடி, தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் அனைத்து பள்ளிகளும் இயங்கியதாக அனைத்து பள்ளிகளின் இயக்குனர்களும் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அன்றைய தினம் பெரும்பாலான பள்ளிகளில் காலாண்டு தேர்வின் மொழிப்பாடத்தின் முதல் தாள் தேர்வு நடைபெற்றது என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள், பள்ளிகள் மூடப்படுவது தொடர்பாக மனுதாரர்கள் வைத்த கோரிக்கைகளை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

English summary
Advocate General A L Somayaji filed a status report prepared by the Principal Secretary of Home Department on the steps taken to maintain law and order in the State. The report listed the various measures taken by the government to maintain law and order a day ahead of the Bangalore Special Court gave its verdict.He submitted that the joint secretary of School Education Department has stated through an affidavit that all the government, government-aided and private educational institutions were opened on October 7 as directed by the HC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X