For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் மொத்தம் 9 பசுமை வழி சாலை திட்டங்கள்.. பறிபோகும் விவசாய நிலம்.. என்ன காரணம்?

சேலம் - சென்னை பசுமை வழி சாலையை போலவே தமிழகம் முழுக்க இன்னும் கூடுதலாக 8 பசுமை வழி சாலைகள் போடப்பட உள்ளது. மத்திய அரசின் பாரத்மாலா பிரதியோஜனா திட்டத்தின் கீழ் இந்த சாலை போடப்பட உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஒன்று அல்ல மொத்தம் 9 பசுமை வழி சாலை தமிழகத்திற்கு வருகிறதாம்- வீடியோ

    சென்னை: தமிழகம் முழுக்க இன்னும் கூடுதலாக 8 பசுமை வழி சாலைகள் போடப்பட உள்ளது. மும்பைக்கு அடுத்து தமிழகத்தில் இப்படி பசுமை வழி சாலை போடுவது அதிகமாகி உள்ளது.

    தமிழ்நாட்டில் மட்டும் சேலம் சென்னை சாலையை சேர்த்து மொத்தம் 9 பசுமை வழி சாலை திட்டங்கள் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 570 கிலோ மீட்டருக்கு புதிய சாலைகள் போடப்பட உள்ளது.

    இதற்காக மொத்தமாக ரூபாய்.43,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பாரத்மாலா பிரதியோஜனா திட்டத்தின் கீழ் இந்த சாலை போடப்பட உள்ளது.

    எங்கு போடப்பட உள்ளது

    எங்கு போடப்பட உள்ளது

    சென்னை - சேலம், மேலூர் -திருப்பத்தூர் - புதுக்கோட்டை - தஞ்சாவூர், கரூர் - கோயம்புத்தூர், கும்பகோணம் -சீர்காழி, மஹாபலிபுரம் - பாண்டிச்சேரி, திண்டுக்கல் - பொள்ளாச்சி, மதுரை - தனுஷ்கோடி (பாம்பனில் புதிய பாலம்), சென்னை - சித்தூர், சென்னை - ஓசூர் ஆகிய 9 திட்டங்கள் மொத்தம் தமிழகத்தில் வர இருக்கிறது.

    விவசாயம்

    விவசாயம்

    இதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்ன வென்றால், இந்த சாலைகள் எல்லாம் டெல்டா பகுதிகளையோ மற்ற விவசாய மாவட்டங்களையோ இணைக்கும் வகையில் போடப்பட உள்ளது. இதனால் மொத்தமாக விவசாய நிலங்கள் பெரிய அளவில் ஆக்கிரமிக்கப்பட உள்ளது. ஏற்கனவே பல்வேறு திட்டங்களுக்காக விவசாய நிலங்கள் பறிபோய் இருக்கும் நிலையில், தற்போது சாலைகள் விவசாய நிலங்கள் பறிபோகும்.

    போராட்டம் நடக்கும்

    போராட்டம் நடக்கும்

    தூத்துக்குடி போராட்டத்திற்கு பின் தமிழகத்தில், போராட்டம் என்பதே அரிதான ஒன்றாக மாறிவிட்டது. தூத்துக்குடி சூடு காரணமாக, மக்கள் போராட்டம் நடத்த அச்சத்துடன் இருக்கிறார்கள். இதனால்தான் சேலத்தில் இதுவரை போராட்டம் பெரிய அளவில் தொடர்ச்சியாக நடக்காமல் போய் இருக்கிறது. ஆனாலும் இந்த பசுமை வழி சாலை திட்டங்கள் தமிழகத்தில் போடப்படும் போது பெரிய பிரச்சனை உருவாகும்.

    காரணம் என்ன?

    காரணம் என்ன?

    இந்த சாலை போடப்பட பல்வேறு விதமான காரணம் சொல்லப்படுகிறது. முதல் விஷயமாக, தமிழகத்தின் எல்லா மாவட்டங்களையும் இந்த பசுமை வழி சாலையில் இணைக்க போகிறார்கள். புதிதாக வேறு சில மாவட்டங்களில், தொழில்நிறுவனங்கள் வளரும். விவசாயத்திற்கு பதிலகா கண்டிப்பாக தொழில்நிறுவனம் வளரும். வேலைவாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. விபத்துக்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

    English summary
    Not only Chennai- Salem greenfield road, TN will have 8 more projects in few years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X