For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி: மத்திய அரசுடன் தமிழகம் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் எங்கே போகும் தெரியுமா? கமல் எச்சரிக்கை

ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் எங்கே போகும் தெரியுமா? என கமல்ஹாசன் மிரட்டல் விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுடன் தமிழகம் அமைதியாக ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் எங்கே போகும் தெரியுமா? வீரத்தின் உச்சகட்டமே அகிம்சைதான் என கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சியில் நடைபெறும் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் முன்னோடியானது என்றார்.

காவிரி மேலாண்மை வாரியம் இல்லையெனில் தமிழகம் ஒத்துழைக்க மறுக்கும் என்றும் அவர் கூறினார். காவிரியில் மத்திய அரசு செய்வது தவறு என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

வெள்ளையனே வெளியேறு

மத்திய அரசை அவமரியாதை பேசுவதை நாங்கள் செய்ய மாட்டோம் என்ற கமல் வெள்ளையனே வெளியேறு என்பதுதான் போதுமானது என்றார். டே! வெள்ளைக்கார நாயே வெளியேறு என்று சொல்லும் அவசியம் இல்லை என்றும் கமல் கூறினார்.

திசை திரும்பமாட்டோம்

திசை திரும்பமாட்டோம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும் என்றும் காவிரி பிரச்சனையை திசை திருப்பாதீர்கள், திசை திருப்பினால், திசை திரும்பமாட்டோம் என்றும் அவர் கூறினார்.

எழுப்பவே முடியாது

எழுப்பவே முடியாது

கலவரங்கள் மூலம் திசை திருப்பினாலும் திசை திரும்பமாட்டோம் என்றும் மீண்டும் கோரிக்கை வைத்து உறங்குவர்களை எழுப்பலாம் என்றும் உறங்குபவர்களை போல நடிப்பவர்களை எழுப்பவே முடியாது என்றும் கமல்ஹாசன் கூறினார்.

தொடையை தட்டுவது வீரம் அல்ல

தொடையை தட்டுவது வீரம் அல்ல

ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் எங்கே போகும் தெரியுமா? என்று கேட்ட அவர் வீரத்தின் உச்சகட்டமே அகிம்சைதான் என்றார். தொடையை தட்டுவது வீரம் அல்ல, தொடையை தட்டவும் எங்களுக்கு தெரியும் என்றும் கமல் எச்சரித்தார்.

English summary
Kamal haasan questioned in Trichy meeting that Do you know where the non-cooperation movement will go? He also has warned that the ahimsa is the Heroism.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X