For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவிலும் மாவட்டங்கள் பிரிப்பு.. ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு மா.செ.?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலில் 3 தொகுதிகளை இழந்ததால் அதிமுகவில் களையெடுப்பு அதிரடியாக நடந்தது.. அமைச்சர்கள் மூவரின் பதவியும் பறிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திமுகவும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது திமுகவை மிரட்டும் வகையில் அதிமுகவிலும் அதிரடி மாற்றங்களுக்கு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லோக்சபா தேர்தலில் அதிமுக 37 தொகுதிகளைக் கைப்பற்றியது. திமுகவோ ஒரு இடத்தைக் கூட பெறவில்லை.

தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே அதிமுகவில் களையெடுப்பு தீவிரமானது. மூன்று அமைச்சர்கள் பதவி பறிக்கப்பட்ட கையோடு அவர்கள் கட்சியில் வகித்து வந்த பொறுப்புகளும் பறிக்கப்பட்டன.

திமுகவில் அதிரடி

திமுகவில் அதிரடி

இதேபோல் திமுகவும் 6 பேர் கொண்ட குழுவை அமைத்து கட்சி மாவட்டங்களை 65 ஆக பிரித்தது. அத்துடன் 33 நிர்வாகிகள் மீது முதல் கட்டமாக சஸ்பென்ட் நடவடிக்கையை மேற்கொண்டது. பின்னர் மேலும் 15 நிர்வாகிகளுக்கு நோட்டீஸும் அனுப்பியுள்ளது திமுக.

மேலும் 62 பேருக்கு நோட்டீஸ்

மேலும் 62 பேருக்கு நோட்டீஸ்

அத்துடன் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு என பல மூத்த நிர்வாகிகள் 62 பேருக்கும் நோட்டீஸ் போக இருக்கிறது என்கிறது அறிவாலய வட்டாரங்கள்.

அதிமுகவும் வியூகம்

அதிமுகவும் வியூகம்

இந்த நிலையில் திமுகவின் இந்த அதிரடிகளை மிரட்டும் வகையில் அதிமுகவும் 2016 சட்டசபை தேர்தலை மையமாக வைத்து வியூகம் வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மா.செ?

ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மா.செ?

சென்னை மாவட்டத்தை திமுக 4 ஆக பிரித்துள்ளது. ஆனால் அதிமுகவோ சென்னையில் உள்ள ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு மாவட்ட செயலாளரை நியமிக்கலாமா என ஆலோசித்து வருகிறது.

மதுரை, திருச்சி..

மதுரை, திருச்சி..

இதேபோல் மதுரை, திருச்சி, கோவை மாவட்டங்களையும் பிரித்து புதியவர்களுக்கு பதவி தர ஆலோசிக்கப்படுகிறதாம்.

மூத்த அமைச்சர்களின் மாவட்டங்களும்

மூத்த அமைச்சர்களின் மாவட்டங்களும்

அதே நேரத்தில் அதிமுகவிலும் குறுநில மன்னர்கள் போல கோலோச்சி வரும் மூத்த அமைச்சர்களின் மாவட்டங்களையும் பிரித்து அதிர்ச்சி தரவும் அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறது அதிமுக வட்டாரங்கள்.

English summary
AIADMK may to restructure its district-level units almost doubling, in a bid to revitalise the party ahead of the assembly elections in 2016.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X