For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதாரு அதாரு.. உதாரு உதாரு... ஸ்ரீரங்கம் வெற்றியை குத்தாட்டம் ஆடிக் கொண்டாடிய அதிமுக மகளிர்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக மகளிர் அணியினரின் குத்தாட்டத்தை அவ்வளவு எளிதாக யாரும் மறக்கமுடியாது அந்த அளவிற்கு பிரசித்தம். இதை நன்கு உணர்ந்தவர் சுப்ரமணியசுவாமிதான்.

இதோ இடைத்தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட உடன் மகளிர் அணியினர் மீண்டும் ஒரு குத்தாட்டம் போட்டு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துள்ளனர்.

ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வளர்மதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆனந்தனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த இடைத்தேர்தல் வெற்றியை அதிமுகவினர் இனிப்புகள் கொடுத்தும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

போயஸ்கார்டனில் குவிந்த அதிமுக மகளிர் அணியினர் குத்தாட்டம் போட்டதுதான் கொண்டாட்டத்தின் ஹைலைட்.

இடைத்தேர்தல்

இடைத்தேர்தல்

ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுக்கு கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்றைய தினம் 23 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்பட்டன. ஆரம்பம் முதல் இறுதிவரையிலும் அதிமுக வேட்பாளரின் கையே ஓங்கியிருந்தது.

ஒரு லட்சத்தை தொட்டது

ஒரு லட்சத்தை தொட்டது

முதல் சுற்றில் இருந்து தொடர்ந்து முன்னிலையில் இருந்த வளர்மதி, 96,515 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஆனந்தை தோற்கடித்தார்.

காலை முதலே உற்சாகம்

காலை முதலே உற்சாகம்

இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என்று அறிந்த அதிமுகவினர் போயஸ்கார்டனில் காலை 6 மணி முதலே குவிந்தனர். அதிமுகவின் தலைமைக்கழகத்திலும் ஏராளமான தொண்டர்கள் உற்சாகமாக கூடினர்.

வெடித்த பட்டாசுகள்

வெடித்த பட்டாசுகள்

அதிமுக தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாக தொலைக்காட்சி வாயிலாக அறிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட தொண்டர்கள் பட்டாசுகளை வெடிக்கச் செய்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

ஸ்வீட் எடு கொண்டாடு

ஸ்வீட் எடு கொண்டாடு

அதிமுக தலைமை அலுவலகம் முன்பு குவிந்துள்ள அதிமுகவினர் தட்டு நிறைய லட்டுகளை வைத்துக்கொண்டு, ஏராளமானவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.

அக்கா ஒரு குத்து போடு

அக்கா ஒரு குத்து போடு

போயஸ்கார்டன் முன்பு குவிந்திருந்த மகளிர் அணியைச் சேர்ந்த தொண்டர்கள் அனைவரும் ஆரம்பத்தில் அமைதியாக வெற்றியை கொண்டாடினர். நேரம் செல்லச் செல்ல வாக்கு வித்தியாசம் அதிகரிக்கவே குத்தாட்டம் போட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அம்மாவுக்கு வெற்றி

அம்மாவுக்கு வெற்றி

கைநிறைய தங்க வளையல், கழுத்துநிறைய நகை அதில் அம்மா படம் போட்ட டாலர் அணிந்த அதிமுக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்மணிகள் அம்மாவுக்கே வெற்றி என்று என்று இரட்டை விரலை காட்டி முழக்கமிட்டனர்.

தமிழகம் முழுவதும் உற்சாகம்

தமிழகம் முழுவதும் உற்சாகம்

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலை தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மதுரையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு கூடிய தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து உற்சாக முழக்கமிட்டனர்.

எங்க வந்து யாருக்கிட்ட

எங்க வந்து யாருக்கிட்ட

டெல்லி தேர்தல் முடிவுகள் ஸ்ரீரங்கத்தில் எதிரொலிக்கும் என்று எதிர்கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். ஆனால் திமுக தவிர அதிமுகவை எதிர்த்து போட்டியிட்ட அனைவரின் டெபாசிட்டையும் காலியாகிவிட்டது பார்த்தீர்களா? எங்க வந்து யாருகிட்ட? அம்மா தொகுதி அம்மாவுக்குத்தான் என்று கூறி மறுபடியும் ஒரு ஆட்டம் போட்டனர் மகளிர் அணியினர்.

நோட் பண்ணுங்கப்பா..... புளு சேலை கட்டுன அந்த அக்காக்களுக்கு அடுத்த தேர்தலில் ஒரு சீட் உறுதி!

English summary
The ruling AIADMK in Tamil Nadu was leading at the end of the Fourth round of counting for the Srirangam assembly byelection on Monday morning. AIADMK cedars celebrates in head office and Poes garder
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X