For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.வுக்கு ஜாமீன்: 'இரட்டை இலை' சின்னம் காட்டும் ரித்தீஷ்... ஓங்கி அடிச்சா 234 டன் வெயிட்டுவே!...

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகால சிறைதண்டனை பெற்றுள்ள ஜெயலலிதாவிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து பெங்களூர் சிறையில் இருந்து அவர் விடுதலையாகிறார்.

கடந்த 27ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அன்றைய தினம் தொடங்கி ஜாமீன் கிடைக்கும் வரை அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியும், ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டும் துக்கம் அனுஷ்டித்தனர்.

ஜாமீன் கிடைத்த பின்னர்தான் அதிமுகவினரிடையே உற்சாகம் களைகட்டியுள்ளது. அதே உற்சாகத்தோடு அம்மாவின் வரவை எதிர்பார்த்து போஸ்டர்களும் ஒட்டத் தொடங்கிவிட்டனர்.

ஜே.கே.ரித்தீஷ் வெற்றிச்சின்னம்

ஜே.கே.ரித்தீஷ் வெற்றிச்சின்னம்

ஜெயலலிதாவுக்கு டிவியில் ஜாமீன் கிடைத்த செய்தியை பார்த்த நடிகரும் முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்தீஷ், இரட்டை விரலைக்காட்டி வெற்றிச் சின்னம் காட்டி மகிழ்ச்சியுடன் சிரிக்கிறார். சத்தியத்தின் வெற்றி, சரித்திரம் பேசும் வெற்றி என்றும் அவர் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.

நீதி வென்றது…

நீதி வென்றது…

தாயே நீதி வென்றது... உங்களை பாசத்துடன் வரவேற்கும் தமிழ்நாடு என்றும் வரவேற்கிறார் ரித்தீஷ். அம்மா இன்றே தமிழகம் திரும்பட்டும் என்று கூறியுள்ளார் ரித்தீஷ்.

மதுரையில் ஒரு போஸ்டரில்...

மதுரையில் ஒரு போஸ்டரில்...

ஓங்கி அடிச்சா 234 டன் வெயிட்டு

சிங்கத்தை காட்டுல பார்த்திருப்ப!

கர்நாடக கோர்டுல பார்த்திருப்ப!

ஏன் பரப்பன அக்ரஹாரா சிறையில கூட பார்த்திருப்ப!

அது வெறித்தனமா வெளியேறி

தொகுதிவாரியா ஓட்டு வேட்டையாடி பார்த்திருக்கிறயா?

பார்க்கிறயா? பார்க்கிறயா?.

அம்மா ஓங்கி அடிச்சா 234 டன் வெயிட்டுவே!

உறங்காத கண்கள்

உறங்காத கண்கள்

கண்கள் உறங்கவில்லை, இமைகள் தழுவவில்லை... என்று தொடங்கி, வருகைக்கு காத்திருக்கிறோம் இறைவா என்று ஸ்டேட்டஸ் போட்டுள்ளார் ஒரு தொண்டர்.

தமிழ் இனத் தாயி

தமிழ் இனத் தாயி

அதே தொண்டர்தான், எங்கள் அம்மாவின் வருகைக்கு காத்திருக்கிறோம் என்றும் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.

இன்னும் என்னவெல்லாம் போடப்போறாங்களோ தெரியலையே?

English summary
AIADMK cadres erupted in joy Friday after the Supreme Court granted bail to jailed former Tamil Nadu chief minister J. Jayalalithaa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X