For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அங்கே எடப்பாடியார் பவ்யம்.. இந்தபக்கம் மோடி மீது 'நமது எம்ஜிஆர்' காட்டம்! என்னா திட்டு அடேங்கப்பா!!

மோடி தலைமையிலான பாஜக அரசு ' நாடு காக்கும் அரசா? காந்தி தேசத்தை கார்ப்பரேட்டுகளுக்கு படைக்கும் அரசா? கருப்பு பணத்தை ஒழித்த அரசா?' என்று சரமாரி கேள்விகளுடன் நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் விமர்சிக்கப்பட்ட

By Devarajan
Google Oneindia Tamil News

சென்னை: நேரடியாகவே மத்திய பாஜக அரசை , அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர். விமர்சித்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் மூன்றாண்டு ஆட்சியை சித்ரகுப்தன் என்ற பெயரில் கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மோடி அரசின் மூன்றாண்டு.
இது- நாடு காக்கும் அரசா?
காந்தி தேசத்தை கார்ப்பரேட்டுகளுக்கு படைக்கும் அரசா?

கருப்பு பணத்தை ஒழித்த அரசா?
கரன்சியை காகிதமாக்கி கஷ்டங்களை விதைத்த அரசா?

ஆண்டுக்கு பதினைந்து லட்சம் பேருக்கு வேலை...
ஆளுக்கு பதினைந்து லட்சம் ரூபாய்... என வாக்குறுதி காத்த அரசா?

பதஞ்சலி, பகவத் கீதைக்கு பல்லக்கு தூக்கும் அரசா?
பாரதத்தின் பன்முக தன்மையை போக்கும் அரசா?

மம்தா உயிருக்கு பதினோரு லட்சம்...
பினராய் விஜய் தலைக்கு ஒரு கோடி என்றெல்லாம்
ஆன்டி-இந்தியன் பழி போட்டு ஆணவம் மமதையில் அலைகிற அரசா?

ஐநூறு ராணுவத்தினர் உயிரிழக்க அடிகோலிய 'அநாவசிய போர்' அரசா?
ஜி.எஸ்.டி. வரியால் வருமானம் இழப்பு...
'நீட்' தேர்வால் வருங்காலத் தலைமுறைக்கு வாய்ப்புகள் இழப்பு...

எய்ம்ஸ் தாமதம் உட்பட ஏராள மறுப்பு...
வடபுலத்தை வாழ்விக்க வளர்தமிழ் பூமியை வஞ்சித்தால்
இது- நடுவண் அரசா? நயவஞ்சக அரசா?

எப்படியோ, மூச்சுமுட்ட பேசியே மூன்றாண்டு போச்சு.
ஆனாலும்,
எந்திர, தந்திர, மந்திரத்தை நம்பியே எகத்தாளத்தில் நடக்குது தாமரையின் வீச்சு.
என்று அதில் அச்சிடப்பட்டுள்ளது.

பாஜக மீது அப்படி என்ன திடீர் கோபம்

பாஜக மீது அப்படி என்ன திடீர் கோபம்

இவ்வளவு நாள் அமைதியாக இருந்த சசிகலா,டிடிவி தினகரன் ஆதரவால் வெளியாகும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ், திடீர் என்று பாஜக அரசு மீது சரமாரியாக பாய்ந்துள்ளது காரணமாகத்தான் என்கிறார்கள் அதிமுகவில்.

தினகரன் கையில் ஜனாதிபதி தேர்தல்

தினகரன் கையில் ஜனாதிபதி தேர்தல்

டிடிவி தினகரன் ஓகே சொன்னால்தான் அதிமுக எம்பி மற்றும் எம் எல் ஏக்கள் ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்களிப்பார்கள் என்ற நிலை வலுவாக உள்ளது. அதனை மிக லேட்டாக உணர்ந்த தினகரன் தரப்பு நமது எம்.ஜி.ஆர். அஸ்திரத்தை எடுத்துள்ளது.

எதிர்ப்பால் ஜாமீன் கிடைத்ததா

எதிர்ப்பால் ஜாமீன் கிடைத்ததா

நமது எம்ஜிஆர் நாளிதழ் அரசியல் விமர்சனம் தமிழக பாஜக மூலமாக டெல்லி தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் கொஞ்சம் யோசனை செய்த டெல்லி பாஜக விட்டுப்பிடிக்கலாம் தினகரனை என்று முடிவு செய்துள்ளதாக, கமலாலய வட்டாரம் தெரிவிக்கிறது.

நேற்றே தம்பிதுரை எதிர்த்தார்

நேற்றே தம்பிதுரை எதிர்த்தார்

நேற்று பேட்டியளித்திருந்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மக்கள் மன நிலைக்கு மதிப்பளித்து மாட்டிறைச்சி தடையை வாபஸ் பெற மத்திய அரசு முன்வரவேண்டும் என்றும், மாட்டிறைச்சி தடையில் அதிமுகவுக்கு உடன்பாடில்லை என்றும் கூறியிருந்தார்.

சசிகலா அதிமுக - பாஜக உறவு

சசிகலா அதிமுக - பாஜக உறவு

பாஜகவுடன் சசிகலா அதிமுகவின் உறவு எப்படி உள்ளது என்பது இப்போதைக்கு பெரிய விவாதப்பொருளாக மாறியுள்ளது. ஆனால் பாஜகவை எதிர்க்க துணிய எப்படி நமது எம்ஜிஆர் இதழுக்கு வந்தது என்பதற்கு ஜனாதிபதி தேர்தலை சுட்டிக் காட்டுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

English summary
AIADMK Daily News Paper Namadhu MGR slams on Modi Govt's 3 Years Regime, Sensation in TN Politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X