For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜூன் 21ல் அதிமுக செயற்குழு… 2016 சட்டமன்ற தேர்தலுக்கு வியூகம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் வரும் ஜூன் 21ம் தேதி தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 21-ந் தேதி(சனிக்கிழமை) மாலை 4.20 மணிக்கு சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக்கழகத்தில், அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.

அ.தி.மு.க. செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அந்த அறிவிப்பில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஆண்டுக்கு இருமுறை

ஆண்டுக்கு இருமுறை

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு கட்சிகளும் செயற்குழுவையும், பொதுக்குழுவையும் கூட்டி வருவது வழக்கம்.

லோக்சபாவிற்கு முன்பு

லோக்சபாவிற்கு முன்பு

அந்தவகையில் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. தனித்து நின்று 40 தொகுதிகளிலும் வெற்றி பெற இலக்கு வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரலாறு காணாத வெற்றி

வரலாறு காணாத வெற்றி

இதைத்தொடர்ந்து வந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. சொல்லியடித்து போல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றிவாகை சூடியது. வரலாறு காணாத இந்த வெற்றி தொண்டர்களையும், கட்சி நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்தியது.

ஜூன் 21ல் செயற்குழு

ஜூன் 21ல் செயற்குழு

தேசிய அளவில் அ.தி.மு.க. 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்தநிலையில் லோக்சபா தேர்தலுக்கு பிறகு, இந்த ஆண்டிற்கான அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 21-ந் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

2016 சட்டமன்ற தேர்தல்

2016 சட்டமன்ற தேர்தல்

லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற பிரமாண்ட வெற்றி, 2016-ம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் அ.தி.மு.க.வினர் எவ்வாறு பணியாற்ற வேண்டும், தமிழக அரசின் திட்டங்களுக்கு மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
AIADMK supremo and Tamil Nadu Chief Minister J. Jayalalithaa announced convening a meeting of the party’s executive here on June 21.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X