For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரும்பான்மை இழந்ததா எடப்பாடி பழனிச்சாமி அரசு? அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தால் அம்பலம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக எம்.எல்.ஏ கூட்டம்...வீடியோ

    சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டியுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 104 எம்எல்ஏக்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். அதிமுக அரசு பெரும்பான்மை இழந்துவிட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த கூட்டம் அமைந்துள்ளது.

    தினகரன் தலைமையில் 18 அதிமுக எம்எல்ஏக்கள் பிரிந்து சென்றதால், தற்போது அதிமுகவின் பலம் 116 என்பதாக உள்ளது. திமுகவுக்கு சட்டசபையில் 89 உறுப்பினர்கள் உள்ளனர்.

    திமுக கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 8 உறுப்பினர்களும், முஸ்லிம் லீக்கிற்கு 1 உறுப்பினரும் உள்ளனர்.

    எம்எல்ஏக்கள் பலம்

    எம்எல்ஏக்கள் பலம்

    ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், தினகரன் சுயேச்சையாக வெற்றி பெற்ற நிலையில், சட்டசபையில் சுயேச்சை உறுப்பினர் 1 என குறிப்பிடப்பட்டுள்ளது. சபாநாயகர் பொதுவாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நேரத்தில் வாக்கை பதிவு செய்வது இல்லை. இரு பக்கமும் சமமான வாக்குகள் பதிவானால் அப்போது சபாநாயகர் தனது முடிவை ஏதாவது ஒரு பக்கம் எடுத்து வாக்களிப்பார்.

    தமிழக சட்டசபை பலம்

    தமிழக சட்டசபை பலம்

    தமிழக சட்டசபையில் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 234 ஆகும். அதில் பாதியான 118 எம்எல்ஏக்கள் இருந்தால் அந்த கட்சி ஆட்சியமைக்கலாம். ஆனால் இப்போது, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அந்த இடம் காலியாக உள்ளது.

     104 பேர்தான் உள்ளனர்

    104 பேர்தான் உள்ளனர்

    எனவே சட்டசபையின் தற்போதைய பலம் 216 ஆகும். இதில் பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர் பலம் கொண்ட கட்சிதான் ஆட்சியில் இருக்க முடியும். அதாவது 109 உறுப்பினர்கள் தேவை. ஆனால், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திலோ 104 எம்எல்ஏக்கள்தான் பங்கேற்றனர். சிலர் சபரிமலை சென்றுள்ளதாகவும், சிலருக்கு உடல் நிலை சரியில்லை என்றும், சிலர் வேலுநாச்சியார் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க சென்றுவிட்டதாகவும் பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

    இன்னும் பலர் தாவ வாய்ப்பு?

    இன்னும் பலர் தாவ வாய்ப்பு?

    எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும், அங்கே உள்ள பல எம்எல்ஏக்களும் தனது ஸ்லீப்பர் செல்கள் எனவும் தினகரன் பேசி வருகிறார். இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் போதிய எம்எல்ஏக்கள் இல்லை என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் எத்தனை காலம்தான், பெரும்பான்மை இல்லாத அரசை ஓட்ட முடியும் என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.

    English summary
    The AIADMK MLAs, who are supporting Chief Minister Edappadi Palanisamy faction, have reduced to 104. AIADMK government lost its majority?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X