For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வடசென்னையில் அதிமுக வெல்லும்- ஸ்டாலினின் கொளத்தூரில் திமுகவுக்கு 3வது இடம்: நக்கீரன் சர்வே

By Mathi
|

சென்னை: லோக்சபா தேர்தலில் வடசென்னை தொகுதியில் அதிமுக, திமுக இடையே மிகக் கடுமையான போட்டி இருக்கிறது என்கிறது நக்கீரன் சர்வே. அதே நேரத்தில் இத்தொகுதிக்குட்பட்ட மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் சட்டசபை தொகுதியில் 3வது இடத்தில்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக நக்கீரன் வாரம் இருமுறை இதழ் கருத்து கணிப்புகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. வட சென்னை தொகுதியைப் பொறுத்தவரையில் அதிமுக வெல்லக் கூடும் என்றாலும் திமுக துரத்திக் கொண்டே வருகிறது.

ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் திமுகவுக்கு செம பின்னடைவு

AIADMK may win North Madras : Nakkheeran Survey

திமுக பொருளாளர் ஸ்டாலின் எம்.எல்.ஏவாக இருக்கும் கொளத்தூர் சட்டசபை தொகுதியில் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட 100 பேரில் அதிமுகவுக்கு 34 பேரும் தேமுதிகவுக்கு 28 பேரும் ஆதரவளித்துள்ளனர். ஆனால் திமுகவுக்கு 27 பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆர்.கே.நகர், திரு.வி.க.நகரிலும் திமுகவுக்கு 3வது இடம்

அதேபோல் ஆர்.கே.நகர் மற்றும் திரு.வி.க. நகரிலும் அதிமுகவுக்கே ஆதரவு அதிகம். இங்கும் தேமுதிகவுக்கு 2வது இடம்; திமுகவுக்கு 3வது இடம்தான்

பெரம்பலூரில் சமபலம்

பெரம்பலூர் சட்டசபை தொகுதியில் அதிமுக, திமுக இரு கட்சிகளும் சமபலத்தில் இருக்கின்றன.

ராயபுரம், திருவொற்றியூரில் திமுக

அதே நேரத்தில் ராயபுரத்திலும் திருவொற்றியூரிலும் திமுகவுக்கு நல்ல ஆதரவு இருக்கிறது.

நோட்டாவை விட காங், ஆம் ஆத்மிக்கு குறைவு

இத்தொகுதியில் நோட்டாவுக்கு ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவை விட அதிகம். சி.பி.எம்க்கும் நோட்டாவுக்கும் சம அளவு ஆதரவு.

அதிமுக- திமுக

இருப்பினும் இத்தொகுதியில் அதிமுகவுக்கு 224 பேரும், திமுகவுக்கு 215 பேரும் ஆதரவு கொடுத்திருப்பதால் சமபலத்துடன் நிற்கின்றன.

English summary
Nakkeeran survey has predicted that ADMK will win in North Madras constituency but DMK faces big setback in MK Stalin's Kolathur assembly constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X