For Quick Alerts
For Daily Alerts
அதிமுகவின் கறுப்பு வெள்ளை சிவப்பு கலருக்கு மாறிய டெங்கு கொசுவை பாருங்க!
சென்னை: டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் உள்ள பிரம்மாண்ட கொசுவிற்கு அதிமுக கலரை அடித்து விட்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகள்.
அதிமுக கட்சி, கொடியை தவற விட்டு விட்டு கொசுவிற்கு பெயிண்ட் அடித்துவிட்டிருப்பதாக கமெண்ட் அடிக்கின்றனர் நெட்டிசன்கள்.

அம்மா ஆட்சியில் டெங்கு கொசு தமிழ்நாட்டிற்குள் வருவதற்குக் கூட அஞ்சும் என்று பேசி வந்தனர் அமைச்சர்கள். இப்போதோ பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினசரியும் பலர் மரணமடைந்து வருகின்றனர்.
கொசுவிற்கு பெயிண்ட் அடிப்பதை விட்டு விட்டு கொசுவை ஒழிக்க முயற்சி செய்யலாமே என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.