• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்களை சந்திக்கவே அஞ்சிகிடக்கும் மக்கள் பிரதிநிதிகள்.. தமிழகத்தில் அரங்கேறும் ஜனநாயக கேலிக் கூத்து

By Veera Kumar
|

சென்னை: அகில இந்தியாவிலும் இல்லாத வகையில், ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 18ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்தது. ஆனால் ஓ.பி.எஸ் தலைமையில் அதிமுகவில் மற்றொரு அணி இயங்குவதால் அச்சமடைந்த சசிகலா தரப்பு, எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்களை கூவத்தூரிலுள்ள ஒரு ரிசார்ட்டில் அடைத்து வைத்தது.

சுமார் ஒரு வார காலம் கூவத்தூரில் பெண் எம்.எல்.ஏக்கள் உட்பட 124 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது 122 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்தனர்.

பேட்டியளித்த எம்.எல்.ஏக்கள்

பேட்டியளித்த எம்.எல்.ஏக்கள்

கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக புகார்கள் வந்தபோது சில எம்.எல்.ஏக்கள் வெளியே வந்து தாங்கள் சுதந்திரமாக இருப்பபதாக பேட்டியளித்தனர். அவர்கள் சர்ச்சையை முற்றுப்புள்ளி வைக்க வழங்கிய பேட்டி அவர்களுக்கு எதிராகவே திரும்பியுள்ளது. அப்படியானால், உல்லாசமாக இருக்கவா ரிசார்ட் போனீர்கள் என தொகுதி மக்கள் திருப்பி கேட்க தொடங்கியுள்ளனர்.

உல்லாச பயணம்

உல்லாச பயணம்

சமீபத்தில் ஒரு டிவி விவாதத்தில், இப்படித்தான் அதிமுகவின் நவநீதகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் சுய விருப்பத்தோடு ரிசார்ட்டில் இருந்தனர் என கூறப்போக, எதிரே வாதிட்ட கிறிஸ்துதாஸ் காந்தி என்பவர், ஓ.கே... அப்படியானால், அரசியல் சிக்கலில் தமிழகம் தத்தி தவித்தபோது, ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தோஷமாக இருக்கத்தான் போனார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறோம் என பதிலடியாக தெரிவித்தார். இதற்கு என்ன பதில் சொல்வது என்று, அதிமுக தரப்புக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

மக்கள் கோரிக்கைக்கு மதிப்பில்லை

மக்கள் கோரிக்கைக்கு மதிப்பில்லை

ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, தொகுதி மக்களில் பலரும் தொலைபேசி வாயிலாக தங்கள் தொகுதி எம்.எல்.ஏக்களை அழைத்து ஓ.பி.எஸ்சுச்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்குமாறு வேண்டுகோள்விடுத்த படலமும் அரங்கேறியது. ஆனால், சில எம்.எல்.ஏக்கள் தொகுதி மக்களையே திட்டிவிட்டு போனை ஆப் செய்தனராம். சிலரோ, தொகுதிக்கு வேண்டுமானால் கூடுதலாக ஏதாவது செய்கிறேன். இந்த விஷயத்தில் நீங்கள் தலையிட கூடாது என கட்டளை போட்டனராம்.

தொகுதிகளில் கொந்தளிப்பு

தொகுதிகளில் கொந்தளிப்பு

எம்.எல்.ஏக்களின் இதுபோன்ற முரணான, மக்கள் கருத்துக்கு எதிரான செயல்பாடுகளால் ஆத்திரமடைந்துள்ள மக்கள், தங்கள் எதிர்ப்பை காட்ட தொடங்கியுள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு தினத்தன்று, சபாநாயகர், தனபாலின் அவினாசி அலுவலகத்தில் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

பெரியகுளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கதிர்காமுவை கண்டித்து அத் தொகுதியில் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஒருபக்கம் வரவேற்பு

ஒருபக்கம் வரவேற்பு

அதேநேரம், ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மாஃபா பாண்டியராஜன், மேட்டூர் தொகுதியின் செம்மலை போன்றோருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நெற்றியில் திலகமிட்டு ஆரத்தி எடுத்தனர். இதையெல்லாம் பார்த்துதான், அதிமுகவின் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆளும் கட்சியினரின் அச்சுறுத்தல் காரணமாக எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சில நேரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது தமிழகம் அறிந்த வரலாறு. தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் போன்றோரின் தாக்குதல் அபாயம் இருந்தால் ஆளும் கட்சி பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளித்ததையும் தமிழகம் கண்டுள்ளது. ஆனால், மக்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களை போலீசை தஞ்சயமடைந்த ஒரு மோசமான வரலாறு சம காலத்தில் நமது கண்முன் அரங்கேறி வருவது பெரும் கொடுமை.

ஜனநாயக கேலிக்கூத்து

ஜனநாயக கேலிக்கூத்து

மக்களால், மக்களுக்காக.. என்பதே ஜனநாயகத்தின் பிரசித்தி பெற்ற வரி. ஆனால் மக்கள் அல்லாமல், மக்களுக்கு எதிராக.. என்ற வரியை அடித்தளமாக கொண்டு அதிமுக எம்.எல்.ஏக்களின் 122 பேர் செயல்பட்டதே இந்த அவல நிலைக்கு காரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். மக்கள் பிரதிநிதிகள் என மார்தட்ட வேண்டியவர்களே, மக்களை பார்த்து அஞ்சுகிறார்கள். மக்களுக்காக போராட வேண்டியவர்கள், மக்கள் போராட்டத்தை கண்டு பதுங்குகிறார்கள். இன்னும் என்ன கொடுமைகளையெல்லாம் இந்த தமிழகம் பார்க்க வேண்டுமோ, அது சொக்கனின் நாயகிக்கே வெளிச்சம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
In the first time of the Tamilnadu political history, ruling party MLA's are under police protection to save themselves from the people.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more