For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிர்ந்து போன பாஜக தலைகள்.. ரஜினிக்கு எதிராக கொதித்தெழுந்த அதிமுக அமைச்சர்கள்.. செம திருப்பம்!

பெரியார் குறித்த நடிகர் ரஜினிகாந்தின் கருத்துக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் கடுமையான விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பெரியார் பற்றிய கருத்து.. ரஜினிகாந்த் பரபர பேட்டி - வீடியோ

    சென்னை: பெரியார் குறித்த நடிகர் ரஜினிகாந்தின் கருத்துக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் கடுமையான விமர்சனம் செய்து வருகிறார்கள்.

    துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் ரஜினி காந்த் பெரியார் குறித்த கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது.பெரியார் குறித்து நான் பேசியது தவறானது கிடையாது, என்று கூறியுள்ளார். ரஜினி இப்படி மன்னிப்பு கேட்க மறுத்ததும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

    பெரியார் குறித்தும், முரசொலி குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கள் அவரின் வலதுசாரி அரசியல் நிலைப்பாட்டை எடுத்துக்காட்டி உள்ளது. ரஜினியின் இந்த பேச்சு திமுகவையும், திக தொண்டர்களையும், அதிமுகவையும் கூட கடுமையாக சீண்டி உள்ளது.

    இன்னும் 10 நாள்தான்.. 5000 இடங்களில் போராட்டம் வெடிக்கும்.. பாருங்கள்.. பீம் ஆர்மி ஆசாத் மாஸ் சவால் இன்னும் 10 நாள்தான்.. 5000 இடங்களில் போராட்டம் வெடிக்கும்.. பாருங்கள்.. பீம் ஆர்மி ஆசாத் மாஸ் சவால்

    அதிமுக நிலைப்பாடு

    அதிமுக நிலைப்பாடு

    ரஜினியின் இந்த கருத்துக்கு எதிராக தமிழக அதிமுக அமைச்சர்கள் கொதித்தெழுந்துள்ளனர். திமுக கூட இந்த விஷயத்தில் கொஞ்சம் அமைதியான போக்கை கடைபிடிக்கிறது. அதிமுக அமைச்சர்கள் ரஜினியை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். ரஜினி பேசியது தவறு, பெரியார் குறித்து ரஜினியின் கருத்து ஏற்றுக்கொள்ள கூடியது கிடையாது என்று அதிமுக அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் இதில் கடுமையான விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    ஜெயக்குமார் கருத்து

    ஜெயக்குமார் கருத்து

    அமைச்சர் ஜெயக்குமார் தனது கருத்தில், பெரியாரை ரஜினி படிக்க வேண்டும். ரஜினி தேவையில்லாமல் பேசுவதற்கு பதில் வாயை மூடி மவுனமாக இருக்கலாம். பெரியார் குறித்த கருத்தை ரஜினி தவிர்த்து இருக்க வேண்டும். பத்த வச்சிட்டியே பரட்டை என்பதை போலத்தான் ரஜினிகாந்த் பேசி இருக்கிறார். அவர் ஏன் இப்படி கடந்த காலத்தை பற்றி உண்மை இல்லாத விஷயத்தை பேசுகிறார். இது போன்ற செயல்களை அவர் தவிர்ப்பது நல்லது.

    மதிக்கப்பட வேண்டியவர்

    மதிக்கப்பட வேண்டியவர்

    தந்தை பெரியார் மதிக்கப்பட வேண்டியவர். அவரது பெயருக்கு களங்கம் விளைவிப்பதை ஏற்க முடியாது. மக்களை திசைத் திருப்பும் வேலையில் ரஜினிகாந்த் ஏன் ஈடுபட வேண்டும்? அவர் தான் பேசி கருத்தை உடனே வாபஸ் வாங்க வேண்டும். பெரியார் தமிழக அரசியலின் தலையாய தலைவர். அவரை களங்கப்படுத்த நினைப்பது மிகப்பெரிய தவறில் முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று ரஜினிக்கு ஜெயக்குமார் அறிவுரை வழங்கி உள்ளார்.

    உதயகுமார்

    உதயகுமார்

    இதேபோல் ரஜினியின் கருத்துக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதில் அளித்துள்ளார். அதில், சமூக நீதியின் காவலனாக திகழ்ந்த பெரியாரை பற்றி, ரஜினி கூறி தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் தமிழக மக்கள் இல்லை. முதலில் பெரியார் பற்றி ரஜினி தெரிந்துகொள்ள வேண்டும். கொள்கையில் மாற்றுக் கருத்து இருக்குமானால் சொல்லலாம். ஆனால் மக்கள் மனம் புண்படாத வகையில் அதை தெரிவிக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

    முழுக்க முழுக்க தவறு

    முழுக்க முழுக்க தவறு

    நாட்டுக்காக உழைத்தவர்கள் குறித்து கருத்து கூறும்போது அவர்கள் பற்றி முழுமையாக அறிந்து கூற வேண்டும். இது ரஜினிக்கு கொஞ்சம் கூட தெரியவில்லை.எத்தனை ரஜினிகள் வந்தாலும் பெரியாரின் புகழை மறைக்க முடியாது. ரஜினி தர்பார் படம் எடுக்கலாம். தமிழக அரசியலில் அவரால் தர்பார் செய்ய முடியாது. மக்கள் தீர்ப்புதான இறுதியானது என்பதை ரஜினி தெரிந்துகொள்ள வேண்டும் என்று உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    கடம்பூர் ராஜு என்ன சொன்னார்

    கடம்பூர் ராஜு என்ன சொன்னார்

    இதேபோல் ரஜினியின் கருத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார். அதில், துக்ளக் விழாவில் பெரியாரைப் பற்றி ரஜினி பேசியதற்கு அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும். நான் கூற முடியாது. கமலுக்கும், ரஜினிக்கும் வரலாறும் தெரியவில்லை, அரசியலும் தெரியவில்லை. அவர்கள் இருவரும் அரைகுறையாகப் பேசுகிறார்கள். இதை அவர்கள் உடனே நிறுத்த வேண்டும். சமூகமும் அரசியலும் கெட்டுவிட்டதாகக் கூறும் ரஜினி ஏன் அரசியலுக்கு வர நினைக்கிறார்?, என்று கேட்டுள்ளார்.

    ரஜினி என்ன நினைப்பு

    ரஜினி என்ன நினைப்பு

    பெரியார் பற்றி பேசினால், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கு ஆதரவு தரும் என்றுதான் ரஜினி நினைத்தார். பாஜக ரஜினிக்கு ஆதரவு தருகிறது. ஆனால் பாஜகவிற்கு தமிழகத்தில் அவ்வளவு குரல் இல்லை. மாறாக அதிமுக ரஜினிக்கு எதிராக கடுமையாக பேச தொடங்கி உள்ளது. ரஜினியோ, ரஜினியின் ரசிகர்களோ இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

    அதிமுக போக்கு

    அதிமுக போக்கு

    அதேபோல் பாஜகவும் அதிமுகவின் போக்கை பார்த்து பாஜகவின் தலைவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரஜினியை அதிமுக எதிர்க்கும் என்று நினைக்கவில்லை. மிக கடுமையாக அதிமுக பேசுகிறது. நாங்கள் மனதில் வேறு திட்டத்தை வைத்து இருந்தோம், ஆனால் அதிமுக வேறு மாதிரி இதற்கு எதிர்வினையாற்றி உள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சி தருகிறது, என்று பாஜக தலைகள் புலம்பி வருகிறார்கள்.

    English summary
    AIADMK speaks against Actor Rajinikanth for his comment on Periyar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X