For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபையில் கிடுகிடுவென உயர்ந்த அதிமுக பலம்.. இடைத் தேர்தல் வெற்றிக்கு பிறகு எத்தனை எம்எல்ஏக்கள்?

Google Oneindia Tamil News

Recommended Video

    AIADMK strength in the Tamil Nadu assembly

    சென்னை: நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றியை அடுத்து சட்டசபையில் அதன் பலம் அதிகரித்து உள்ளது.

    கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக, இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது.

    திமுக 89 தொகுதிகளையும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 8 மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதியையும் கைப்பற்றின.

    லோக்சபா தேர்தலில் தோற்றிருக்கலாம்.. இடைத் தேர்தல்களில் அதிமுக அசத்துகிறதே எப்படி? சீக்ரெட் இதுதான்லோக்சபா தேர்தலில் தோற்றிருக்கலாம்.. இடைத் தேர்தல்களில் அதிமுக அசத்துகிறதே எப்படி? சீக்ரெட் இதுதான்

    2 தொகுதிகள்

    2 தொகுதிகள்

    பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து, அந்த பொதுத் தேர்தலின் போது, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய இரு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    22 தொகுதிகள்

    22 தொகுதிகள்

    இந்த நிலையில்தான் டிடிவிதினகரனுக்கு ஆதரவாக சென்ற அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்த பிறகு, 22 சட்டசபை தொகுதிகளுக்கு சமீபத்தில் லோக்சபா தேர்தல் காலகட்டத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 9 தொகுதிகளை அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

    பலம்

    பலம்

    இப்போது விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு சட்டசபை தொகுதிகளையும், அதிமுக கைப்பற்றியுள்ளது. எனவே, சட்டசபையில் அதிமுகவின் பலம் என்பது 124 ஆக உயர்ந்துள்ளது. அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க தேவைப்படும், குறைந்தபட்ச எம்எல்ஏக்கள் பலம் 118 ஆகும்.

    கூடுதலாக பலம்

    கூடுதலாக பலம்

    திமுக 100 எம்எல்ஏக்களுடனும், காங்கிரஸ் 7 எம்எல்ஏக்களுடனும் உள்ளது. அதிமுக ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கலைந்துவிடும் என்று திமுக தலைவர்கள் கூறிவந்த நிலையில், அந்த கட்சிக்கு கூடுதலாக இரண்டு எம்எல்ஏக்கள் கிடைத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    English summary
    AIADMK strength in the Tamil Nadu assembly has been increased to 124 MLA after Nanguneri and Vikravandi bye elections results.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X