For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெள்ள நிவாரணப்பொருட்களில் முதல்வர் ஸ்டிக்கரை ஒட்டினால் கடும் நடவடிக்கை: போலீஸ் எச்சரிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வெள்ளம் பாதித்த பகுதிகளிளுக்கு கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களை பறித்து முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும் இடையூறு செய்தால் உடனடியாக கட்சி மேலிடத்துக்கு புகார் அளிக்கலாம் என அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

AIADMK vows to take action against partymen harassing volunteers

சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, தன்னார்வலர்கள் கொண்டு வரும் நிவாரணப் பொருட்களை அதிமுகவினர் பெற்றுக்கொண்டு, அதில் ஜெயலலிதாவின் ஸ்டிக்கர்களை ஒட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டது. புகைப்படங்களுடன் இது தொடர்பான செய்தி வெளியானது. சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

அதிமுக தலைமை எச்சரிக்கை

இதனையடுத்து, நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும் இடையூறு செய்தால் உடனடியாக கட்சி மேலிடத்துக்கு புகார் அளிக்கலாம் என அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது. மேலும், அதிமுகவினர் இடையூறு செய்யும் ஆடியோ, வீடியோ பதிவு இருந்தால் அவற்றையும் கட்சி மேலிடத்துக்கு அனுப்பலாம் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

AIADMK vows to take action against partymen harassing volunteers

தொலைபேசியில் புகார்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும் இடையூறு செய்தால் உடனடியாக கட்சி மேலிடத்துக்கு புகார் அளிக்கலாம். 044-28130787, 044-28132266, 044-28133510 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

மின்னஞ்சலில் புகார்

இதுதவிர [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம். அல்லது @aiadmkofficial என்ற ட்விட்டர் பக்கத்தின் வாயிலாகவும் புகார்களை தெரிவிக்கலாம்" என்றும் அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை எச்சரிக்கை

இதேபோல வெள்ளம் பாதித்த பகுதிகளிளுக்கு கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களை பறித்து முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமுதா ஐ.ஏ.எஸ்

நிவாரணப்பொருட்களை தடுத்து நிறுத்துபவர்கள் பற்றி நேரடியாக ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதாவிற்கு 9551555501 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப்பொருட்கள் மீது முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டச்சொல்வதாக எழுந்த புகாரை அடுத்து காவல்துறையினர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.

English summary
Facing flak from the public, especially on social media, for partymen hindering and harassing volunteers' flood relief operations, the ruling AIADMK on Saturday said it would initiate action against cadre intimidating and threatening volunteers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X