For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக அரசில் பங்கேற்க கூட்டணியில் இணைய அதிமுக திட்டம்?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசில் பங்கேற்பதற்காக அக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய அதிமுக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியே தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது. அதன் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா, தெலுங்குதேசம், சிரோமணி அகாலி தளம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றையும் அமைச்சரவையில் சேர்க்க இருக்கிறது பாஜக.

37 தொகுதிகளில் அதிமுக

37 தொகுதிகளில் அதிமுக

இந்தியாவிலேயே 3வது பெரிய கட்சியாக அதிமுக 37 தொகுதிகளைக் கைப்பற்றி இருக்கிறது.

பாஜக அரசில் இணைய முடிவு?

பாஜக அரசில் இணைய முடிவு?

இதைத் தொடர்ந்து தமிழகத்துக்கான திட்டங்களை நிறைவேற்றும் நோக்கத்தில் மத்திய அரசில் இணைவது என்று பாரதிய ஜனதா முடிவெடுத்துள்ளது.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இது தொடர்பாக அக்கட்சியினர் "வழக்கமான'' அதிமுக தூதர்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

ராஜ்யசபாவை நினைத்து..

ராஜ்யசபாவை நினைத்து..

பாரதிய ஜனதா லோக்சபாவில் பெரும்பான்மை பெற்றாலும் ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லை என்பதால் அதிமுகவை அமைச்சரவையில் சேர்க்கவும் ஆலோசித்து வருகிறது. அதிமுகவுக்கு ராஜ்யசபாவில் 10 எம்பிக்கள் உள்ளனர்.

இப்ப மிரட்ட முடியாதே..

இப்ப மிரட்ட முடியாதே..

அத்துடன் முந்தைய வாஜ்யாப் அரசு சிறுபான்மை அரசாக இருந்ததால் அதிமுக மிரட்டிப் பார்த்தது. ஆனால் தற்போது மோடி அரசு தனிப்பலத்துடன் அமைவதால் அதிமுகவால் மிரட்ட முடியாத என்ற தைரிய மனோநிலைக்கும் பாஜக வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் விரைவில் பாஜக அரசில் அதிமுக இணையும் என்றே தெரிகிறது.

English summary
Sources said, ADMK may chances to participate in the Narendra Modi lead BJP's Strong Govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X