For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோயம்பேட்டில் தூக்கத்தில் மூவர் உயிரை பறித்த 'ஏசி'.. என்ன காரணம், எப்படி தடுக்கலாம்?

Google Oneindia Tamil News

சென்னை: கோயம்பேடு பகுதியில் ஏசி இயந்திரத்தில் இருந்து வெளியான வாயுவை சுவாசித்து, தூங்கிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏசி ஏன் இவ்வாறு கொலைகார மிஷினாக மாறியது என்ற கேள்வியை இந்த சம்பவம் தட்டி எழுப்பியுள்ளது.

உடலுக்கு குளுகுளுப்பை அளிக்கும் ஏசி, நமது அலட்சியத்தால், உயிரையும் பறிக்க கூடிய மோசமான கருவி என்பதை மறந்துவிடாதீர்கள்.

வீடுகளில் உள்ள ஏசிகள்தான் என்று இல்லை, கார்களில் கூட கண்ணாடிகளை ஏற்றிவிடடுக்கொண்டு ஏசியை ான் செய்துவிட்டு தூங்கியவர்கள் அப்படியே தூக்கத்தில் மரணமடைந்த நிகழ்வுகளை செய்திகளாக நீங்கள் படித்திருப்பீர்கள்.

தவிர்க்கும் வழிமுறைகள்

தவிர்க்கும் வழிமுறைகள்

இதற்கெல்லாம் காரணம் என்ன, சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த சரவணன், அவர் மனைவி கலையரசி, அவர்களின் 8 வயது மகன் கார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு இன்று ஏற்பட்ட கதி பிறருக்கு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகளுடன், குளிர்சாதன துறையில் அனுபவம் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களை அணுகினோம்.

[ஏசியில் மின்கசிவு.. மூச்சுத்திணறி 3 பேர் பலியான பரிதாபம்.. கோயம்பேட்டில் பரபரப்பு ]

கார்பன் மோனாக்சைடு ஆபத்து

கார்பன் மோனாக்சைடு ஆபத்து

கோயம்பேடு சம்பவத்திற்கு காரணம், ஏசியிலிருந்து உற்பத்தியாகும், கார்பன் மோனாக்சைடு வாயுவாகத்தான் இருக்கும் என்ற கருத்தை அவர்கள் தெரிவிக்கிரார்கள். கார்பன் மோனாக்சைடு, சுவாசத்தில் பரவினால், மூச்சு திணறல், மூளை செயலிழப்பு ஏற்படுமாம். நிறமும், வாசனையும் அற்ற வாயு இது. கார்பன் மோனாக்சைடு வாயு, ஆக்சிஜனை, உடல் ஏற்கும் திறனை தடுக்கும். உறுப்புகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காது. இதனால்தான், உயிரிழப்பு ஏற்படுகிறது.

இரு வகை மின்சாரம்

இரு வகை மின்சாரம்

கோயம்பேடு சரவணன் வீட்டில், ஜெனரேட்டரும், மின்சாரமும் ஏசிக்காக, மாறி மாறி பயன்படுத்தப்பட்டுள்ளதால் மின் ஏற்றத்தாழ்வு காரணமாக, ஏசியிலிருந்து வாயு கசிந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் சரவணன் முடிந்த அளவு கதவை திறக்க ஓடி வந்துள்ளார். ஆனால் அதற்குள் செயலிழந்து கீழே விழுந்துள்ளார் என்று தெரிகிறது.

தவிர்க்க வழிமுறை

தவிர்க்க வழிமுறை

பல நாட்களாக செயல்படாமல் இருந்த ஏசியை சர்வீஸ் செய்யாமல் உபயோகிப்பதை தவிர்த்தல், உயர் மின் அழுத்தத்தை தாங்க முடியாத கேபிள், சுவிட்ச் ஆகியவற்றை பயன்படுத்தாமல் இருத்தல், போன்றவை விபத்துகளை தடுக்க உதவும் என்கிறார்கள், இத்துறை வல்லுநர்கள்.

English summary
Air conditioner safety precautions are here, you can find it to avoid issues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X