For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு தீபாவளியன்று, ஒலி, காற்று மாசு! புகையால் வாகன ஓட்டிகள் அவதி

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் வழக்கத்தை விட அதிகளவில் ஒலி மாசு ஏற்பட்டுள்ளது. பட்டாசு புகை காரணமாக, சென்னையில் வாகன ஓட்டிகள் கடும்அவதிப்பட்டனர்.

நாடு முழுக்க தீபாவளி நேற்றும், இன்றும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவின் பல மாவட்டங்களில் தீபாவளி இன்றும் கொண்டாடப்படுகிறது. நிலையில், தமிழகத்தில் நேற்று உச்சகட்ட கொண்டாட்டங்கள் இருந்தன.

சென்னையில், மக்கள், பட்டாசு, வான வேடிக்கைகளை போட்டுத்தள்ளிவிட்டனர். இந்தநிலையில், சென்னையில் 5 இடங்களில் ஒலி மாசு பற்றிய ஆய்வை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்தியது.

நேற்று இரவு அதிகம்

நேற்று இரவு அதிகம்

சென்னையில் அதிகளவில் ஒலி மாசு ஏற்பட்டுள்ளதாகவும், நேற்று மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரைதான் அதிகளவில் ஒலி மாசு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாகனங்களில் முகப்பு விளக்கு

வாகனங்களில் முகப்பு விளக்கு

புகை மூட்டம் காரணமாக நேற்று இரவு சென்னையில் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப்பட்டதை பல இடங்களில் பார்க்க முடிந்தது. முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் சென்றனர்.

கூடுதல் ஆர்வம்?

கூடுதல் ஆர்வம்?

டெல்லி உள்ளிட்ட இடங்களில் பட்டாசு மீதான தடை விதிப்பு காரணமாக, சென்னையில் மக்களுக்கு பட்டாசு மீது கூடுதல் ஆர்வம் வந்ததே அதிக அளவிலான பட்டாசு பயன்பாட்டிற்கு காரணம் என்று தெரிகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னையில் எந்த அளவுக்கு ஒலி மற்றும் புகை மாசு ஏற்பட்டுள்ளது என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து வருகிறது. அதன் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

English summary
Air pollution went high in Chennai on Diwali day, as smoke came from crackers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X