For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் இருந்து மலேசியா, தாய்லாந்துக்கு மலிவு விலை விமான பயணம்! ஏர் ஏசியா அறிவிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பெங்களூர் அல்லது சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காங்கிற்கு 4399 ரூபாய் கட்டணத்திலும், பெங்களூரில் இருந்து கோவாவுக்கு 890 ரூபாய் கட்டணத்திலும் பயணிக்கும் அளவுக்கு கட்டண சலுகைகளை அறிவித்துள்ளது ஏர் ஏசியா விமான நிறுவனம்.

'பிக்சேல்' என்ற பெயரில் குறிப்பிட்ட வழித்தட பயணங்களுக்கு, அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது ஏர்ஏசியா விமான நிறுவனம். இதன்படி, பெங்களூருவில் இருந்து கோவா, கொச்சி, விசாகபட்டிணத்துக்கு பயணிக்க கட்டணம் ரூ.890 மட்டுமே. பெங்களூருவில் இருந்து டெல்லி, சண்டீகர், ஜெய்ப்பூர் போன்ற நகரங்களுக்கான கட்டணம் ரூ.2490 என்ற வகையில் குறைக்கப்பட்டுள்ளது.

AirAsia announces 'Big Sale' on selected routes

இந்தியாவில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் ஏர் ஏசியா விமானத்திற்கான பயண கட்டணம், ரூ.3399 என்ற நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண சலுகை திட்டம், 2016 மார்ச் 1 முதல் அவ்வாண்டு அக்டோபர் 29ம் வரையிலான பயணத்திற்கு மட்டுமே. இவ்வாண்டு செப்டம்பர் 13ம் தேதிவரை டிக்கெட்டுகளை புக் செய்துகொள்ளலாம்.

பட்ஜெட் விமான நிறுவனமான கோஏர் 'ஹேப்பிடியூஸ்டேஸ்' என்ற பெயரில் களமிறங்கியுள்ளது. செவ்வாய்க்கிழ மைகளில் மேற்கொள்ளும் பயணங்களுக்கு கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி அறிவித்துள்ளது அந்த நிறுவனம். போட்டி காரணமாக, சில குறிப்பிட்ட ரூட்டுகளுக்கு ரூ.1248 என்ற கட்டணத்தை ஃபிக்சடாக நிர்ணயித்துள்ளது ஜெட்ஏர்வேஸ்.

இவ்வாண்டின் முதல் 7 மாத காலத்தில் இந்தியாவிற்குள் பயணிக்கும் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 21 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The Indian arm of Malaysian low-cost airline AirAsia announced a 'Big Sale' on Monday, offering a slew of promotional schemes on select domestic and international routes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X