For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேட்காமலேயே வாடிக்கையாளருக்கு காலர் டியூன்... ஏர்டெல் நிறுவனம் ரூ.5000 இழப்பீடு வழங்க உத்தரவு

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் வாடிக்கையாளரிடம் கேட்காமலேயே அவருக்கு காலர் டியூன் வழங்கி அதற்கு கட்டணம் வசூலித்த ஏர்டெல் நிறுவனம், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5000 இழப்பீடு வழங்க வேண்டும் என கோவை மாவட்ட குறைதீர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் கணபதி புதூர், தரணி நகரைச் சேர்ந்தவர் சஞ்சய்காந்தி. அவர், கடந்த 2004-ம் ஆண்டு கோவை, அவிநாசி சாலையில் உள்ள "ஏர்டெல்" தொலைத்தொடர்பு நிறுவனத்தில் சிம்காட்டு வாங்கியுள்ளார். போஸ்ட்பெய்ட் திட்டத்தில் வாங்கிய அந்த சிம்கார்டுக்கு ரூ.480 செலுத்தியுள்ளார்.

Airtel has to give compensation Rs.5000 to victim, verdict

இந்நிலையில், சஞ்சய் காந்தியின் அனுமதி இல்லாமல் அவரது செல்லிடப்பேசிக்கு காலர் டியூன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு மாதந்தோறும் ஒரு தொகை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, அவர் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால், இது குறித்து அந்நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சஞ்சய் காந்தி, கோவை மாவட்டக் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசங்கரன் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். அதில், மனுதாரர் சஞ்சய் காந்திக்கு, சிம்கார்டுக்காக வாங்கிய முன்தொகை ரூ.480, இழப்பீட்டுத் தொகை ரூ. 5000 மற்றும் வழக்குச் செலவுத் தொகை ரூ.2000 ஆகியவற்றை தொலைதொடர்பு நிறுவனம் வழங்க வேண்டும். மேலும், அவை இரண்டு மாதங்களுக்குள் மனுதாரருக்கு வழங்கப்பட வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தனர்.

English summary
Covai District court verdict says Airtel has to give compensation Rs.5000 to victim.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X